நெல்லை மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ரசூல். இவரது மகள் பாத்திமா வயது 4. இந்த சிறுமிக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நெல்லை பெருமாள்புரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு கடந்த 20 நாட்களுக்கு மேலாக சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. சிகிச்சையின் முடிவில் சிறுமியின் நுரையீரல் பகுதியில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்து மீண்டும் தொடர் சிகிச்சை நடந்து வந்திருக்கிறது.
தற்பொழுது இன்று சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுகாதாரத் துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமியின் உடலில் எதிர்ப்பு சக்தியே அவருக்கு எதிராக மாறி இருந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: கொளுத்தும் கோடை வெப்பம்... விவசாயிகளே உஷார்... ஆட்சியரிடம் இருந்து பறந்த வந்த அதிரடி உத்தரவு...!
மேலும் தனியார் மருத்துவமனை நடத்திய பரிசோதனை ஆவணங்களில் சிறுமிக்கு அடினோ வைரஸ் பாதிப்பு இருந்ததும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சிறுமி இறந்ததற்கான உண்மையான காரணம் என்ன உடலில் என்னென்ன பாதிப்புகள் இருந்தது என்பது குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மேலப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மற்றொருபுறம் சிறுமி வசித்து வரும் சுற்றுப்புற பகுதி சுகாதாரக்கேடாக இருப்பதால் நிமோனியா காய்ச்சல் பாதிப்பால் இறந்திருக்கக்கூடும் என்ற கண்ணோட்டத்தில் சுகாதாரத்துறை
இதையும் படிங்க: நெல்லையில் மருத்துவ கழிவுகள் எரிப்பு..! மர்ம நபர்களுக்கு வலை வீச்சு..! வழக்குப்பதிந்த போலீஸ்..!