நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று பட்ஜெட் விளக்க கூட்டம் நடைபெற்றது. மேயர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கமிஷனர் மோனிகா ராணா, துணை மேயர் ராஜு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வரிவிதிப்பு குழு தலைவர் சுதா மூர்த்தி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அறிவிப்புகள்:
- நெல்லை மாநகராட்சி மக்களின் வாழ்வியல் மாற்றத்தை மேம்படுத்தும் வகையில் சிறப்பு திட்ட பணிகள் மற்றும் புதிய பணிகளை 2026 27ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு திட்டத்தில் நிதி 10 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
- உறுப்பினர்கள் அனைவரும் அலுவலகத்தில் அமர்ந்து பணிபுரிய ஏதுவாக 4 மண்டல அலுவலகங்களிலும் கட்டிட வசதி ஏற்படுத்தி தரப்படும்.
- மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு நாப்கின்கள் இலவசமாக வழங்கப்படும்.
- மண்டலத்திற்கு 1 வீதம் 4 நவீன உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும்.
- தெருக்களில் சுற்றி தெரியும் தெரு நாய்களுக்கு பாதுகாப்பான கூரை அமைத்து தொண்டு நிறுவனம் மூலமாக பாதுகாத்திட ராமையன்பட்டி குப்பை கிடங்கு அருகில் பத்தி ஏக்கர் நிலத்தில் நவீன கூரை அமைக்கப்பட உள்ளது.
- மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பழையபேட்டை பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படும்.
- தாமிரபரணி நதி மாசுபடுவதில் இருந்து தடுக்கும் விதமாக ஜெர்மன் வங்கி மேம்பாட்டு நிதி உதவியுடன் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.59.05 கோடி மதிப்பில் நதி முகப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
- ரூ.102.32 கோடி மதிப்பில் ராமாயன்பட்டி உரக்கடங்கு வளாகத்தில் பாதாள சாக்கடை திட்ட கழிவு நீரை சுத்திகரிக்க கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்.
- பாதாள சாக்கடை திட்டப் பணிகளில் கழிவு நீரைச் நிலையங்கள் கழிவுநீர் உந்து நிலையங்கள் இயந்திர குழிகள் ஆகியவற்றில் சேகரமாகியுள்ள நாட் பட்ட கழிவுகளை ரோபோட்டிக் எந்திரம் மூலம் அகற்றுவதற்கு 2 ரோபோடிக் எந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும்.
- டவுன் நயினார் குளத்தில் ரூ.5 கோடி மதிப்பில் படகு சவாரிகள் செய்ய பணிகள் மேற்கொள்ளப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்... இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..!!