நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நெல்லை கோட்டாட்சியர் அலுவலகம் அருகே 3000 சதுர அடியில் தரைத்தளம் மற்றும் பாதி அளவு மாடியுடன் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு 2024 செப்டம்பரில் டெண்டர் ஒதுக்கப்பட்டது.
பணிகள் முடிந்த நிலையில் கட்டிடத்தின் பல பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் முழுமையான பணிகள் முடியாததாகவும் புகார் அளித்தது. அதனைத் தொடர்ந்து டெண்டர் விடப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கட்டிடம் முழுவதும் விரிசல் காணப்படுகின்றன.
அவற்றை மறைக்க சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டும் பல இடங்களில் விரிசல்கள் வெளிப்படையாக தெரிகின்றன. இதனால் கட்டிடம் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் இருக்கிறது.
இதையும் படிங்க: தவெகவில் இணைகிறார் செம்மலை? முதல்வர் விஜய்யின் தாராபுரம் பிரசாரத்தில் நடக்கும் மிகப்பெரிய சம்பவம்?!
அதே மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.52.50 லட்சம் நேற்று புதிய டெண்டர் விடப்பட்டிருக்கிறது.
இந்த டென்டரில் வேறு ஒப்பந்ததாரர்கள் பங்கேற்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டதாக புகார்கள் கூறப்படுகிறது. ஏற்கனவே இதே கட்டிடத்திற்கு ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டிய அதே ஒப்பந்ததாரர் மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே நிதி ஒதுக்கிய கட்டிடம் இன்னும் திறக்கப்படாமல் இருக்க கூடிய நிலையில் மீண்டும் டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் மோனிகா ராணாவிடம் விளக்கம் கேட்டபோது, ஏற்கனவே ஒதுக்கிய நிதி கட்டடத்தை முழுமையாக கட்டி முடிப்பதற்கு போதுமானதாக இல்லை. ஆகவே கூடுதல் நிதிக்கு புதிய டெண்டர் கோரப்பட்டு இருக்கிறது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமைச்சராகிறார் சவுமியா அன்புமணி! முதல்வர் விஜய் க்ரீன் சிக்னல்! தவெக அமைச்சரவையில் பாமக என்ட்ரி?