பாமக நிர்வாகி அன்புமணி தமிழக முழுவதும் தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து பொதுமக்களையும் சந்தித்து வருகிறார். இந்த நிலையில் நாளை நெல்லையில் அன்புமணி சிந்து பூந்துறை பகுதிகளில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் நிகழ்ச்சியை பார்வையிடுவதற்காக வர இருக்கிறார்.
மதியம் இங்குள்ள தனியார் ஓட்டலில் தங்கி உணவு அருந்தி ஓய்வு எடுக்கிறார். இந்த நிலையில் நெல்லை மாவட்ட பாமக நிர்வாகிகள் சார்பில் பாமக நிர்வாகி அன்புமணி நெல்லை வண்ணாரப்பேட்டை ஊசி கோபுரத்திலிருந்து ரோடு ஷோ நடத்துவதற்கு அனுமதி கேட்டு நெல்லை மாநகர காவல் துறையில் கடிதம் கொடுத்தனர்.
நீதிமன்றத்தில் ரோடு ஷோ நடத்துவதற்கு தற்போது அனுமதி வழங்கப்படாத நிலை இருப்பதாக கூறி காவல்துறை சார்பில் அன்புமணி ரோடு ஷோ அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து பாமக நிர்வாகிகள் வேறு இடத்தில் அனுமதி கேட்டனர். அங்கேயும் அனுமதி மறுக்கப்பட்டது.
இதையும் படிங்க: மிஸ் கிட்டயே சொல்றியா? சக மாணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு… அதிர்ச்சியூட்டும் காரணம்…!
இதனிடையே, பாமக நிர்வாகி அன்புமணி நாளை நெல்லையில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தெற்கு பஜார் ராமர் கோவில் வடபுறம் லூர்து நாதர் சிலைக்கு தென்புறம் உள்ள சாலையில் நிறைவு கூட்டம் நடத்த இருக்கிறார்.
தற்போது இதற்கு அனுமதி கூறும் விதமாக மாவட்ட செயலாளர் தங்கராஜ் மாநகர காவல் உதவி ஆணையாளரிடம் அனுமதி கடிதம் கொடுத்துள்ளார். அதன் பின் காவல்துறையினர் 10 விதமான கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி கொடுத்துள்ளனர்.
அந்த 10 கட்டுப்பாடுகள் என்னென்னவென பார்க்கலாம்,
1.நிறைவு கூட்டம் நடத்த தாங்கள் அனுமதி கோரி உள்ள இடமானது பாளையங்கோட்டையின் முக்கிய பகுதி ஆகும் பள்ளிகள் கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் வணிக வளாகங்கள் மாவட்ட விளையாட்டு மைதானம் பேருந்து நிலையம் ஆகியவை அருகில் உள்ளன எனவே பொதுமக்களுக்கு சிரமமின்றி போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
2. வழிபாட்டுத்தலங்கள் மிகுந்த பகுதியாக இருப்பதால் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது.
3. 500 பேர் கலந்து கொள்வார்கள் என கூறியுள்ளீர்கள் அவர்களுக்கு குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் அனைவருக்கும் ஆன இருக்கை வசதியினை உறுதி செய்ய வேண்டும்.
4. கூட்டத்தில் 500 நபர்கள் கலந்து கொள்வார்கள் என கூறியுள்ளதால் அவர்கள் வரும் வாகனங்களை காவல்துறை கூறும் கூறிய இடங்களில் தான் நிறுத்த வேண்டும்.
5. மனுவில் கூறியவாறு குறிப்பிட்ட நேரத்தில் துவங்கி குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்பட வேண்டும்.
6. நிபந்தனைகளை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெற்றால் மேற்படி நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரை முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
7. தாங்கள் நகரும் வகையிலான மேடைகள் அமைக்கவும் நடைபயணம் செய்யவோ செல்லவோ கூடாது மீறினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
8. காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் மீரும் பட்சத்தில் சட்டபூர்வமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தாங்கள் கட்டுப்பட வேண்டும்.
9. நிபந்தனைகளை கடைபிடிக்கும் பட்சத்தில் தாங்கள் அனுமதி கோரி உள்ள செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை தெற்கு பஜார் ராமர் கோவில் வடபுறமும் லூர்துநாதர் சிலைக்கு தென்புறமும் உள்ள சாலையில் நிறைவு கூட்டம் நடத்த நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி வழங்கப்படுகிறது.
10. பிற மதம் சமுதாயம் தனிநபர் குறித்து அவதூறாக பேசக்கூடாது. என்பது உள்ளிட்ட 10 வகையான கட்டுப்பாடுகளை விதித்து காவல்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.
இதையும் படிங்க: கொஞ்சம் பயமா தான்யா இருக்கு! வெறிபிடித்த வளர்ப்பு நாய்... 14 பேரை கடித்துக் குதறிய சம்பவம்...!