• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காணாமல் போன ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் நிலை என்ன?... தமிழ்நாடு அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு...!

    ஒவ்வொரு கட்டமாக காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    Author By Amaravathi Wed, 02 Sep 2026 11:57:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nepal Disaster chennai high court order

    கடந்த 26ஆம் தேதி நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயிருக்கிறார்கள். பலர் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அதிலும் குறிப்பாக, தமிழகத்தைப் பொறுத்தவரையில், கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு டிராவல் ஏஜென்சி மூலமாக நேபாளத்திற்குச் சென்ற 57 பேரில் முதற்கட்டமாக 21 பேர் மீட்கப்பட்டனர். இதில், ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் அவர்களின் நிலை என்ன என்பது தற்போது வரையிலும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்த நிலையில், ஒவ்வொரு கட்டமாக காணாமல் போனவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 220 பேர் வரை இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 85 பேர் வரை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் காணாமல் போயிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: மிகப்பெரிய ஷாக்... மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு... நேபாளத்திற்கு மற்றொரு எச்சரிக்கை மணி...!

    இந்நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு வார காலம் ஆகும் நிலையில், இதுவரை எத்தனை பேர் மீட்கப்பட்டுள்ளனர்? மீதமுள்ளவர்களின் நிலை என்ன? மீட்புப் பணிகள் எந்த அளவுக்கு நடைபெற்று வருகின்றன? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

    இதன் அடிப்படையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டு, அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    இந்த விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில், நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்ட தமிழர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ளவர்களின் நிலவரம் என்ன என்பது குறித்து அவர்களது குடும்பத்தினரிடம் விரிவாகவும் தெளிவாகவும் தெரிவிக்க வேண்டும் என்றும், அங்கு மீட்புப் பணிகளை மிக விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணையின்போது, இதுதொடர்பாக பல்வேறு கருத்துகளும் வாதங்களும் முன்வைக்கப்பட்டன.

    குறிப்பாக, தமிழகத்திலிருந்து நேபாளத்திற்குச் சென்ற 305 பேரில் சுமார் 220 பேர் வரை மீட்கப்பட்டுள்ளதாகவும், 85 பேர் வரை காணாமல் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. காணாமல் போனவர்களின் தற்போதைய நிலை என்ன? மீட்பு நடவடிக்கைகளின் தற்போதைய நிலை என்ன? காணாமல் போனவர்கள் எப்போது மீட்கப்படுவார்கள்? என்பது குறித்து அவர்களது குடும்பத்தினரிடம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    அவ்வாறு தெளிவுபடுத்தினால் மட்டுமே அவர்களது குடும்பத்தினருக்கு ஒருவித ஆறுதல் ஏற்படும். ஆனால், தற்போது வரையிலும் உரிய தகவல்கள் தெளிவாகத் தெரிவிக்கப்படாத நிலையில், காணாமல் போனவர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் மிகப்பெரிய அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதிலும் குறிப்பாக, ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் அவர்களின் நிலை என்ன என்பது தற்போதுவரையிலும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    இவ்வாறான சூழ்நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நேபாளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகளின் தற்போதைய நிலவரம் என்ன? மீட்கப்பட்டவர்களுக்கு என்ன வகையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது? மேலும், காணாமல் போனதாகக் கூறப்படும் நபர்கள் மீட்கப்படுவதற்கான வாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது? அங்கு தற்போது என்ன நிலைமை உள்ளது? என்பது குறித்து முழுமையான தகவல்கள் அடங்கிய அறிக்கையை தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையும் படிங்க: சுரங்கத்தில் சிக்கிய 933 பேர் கதி என்ன?... மீட்புபணிக்கு இடையே வெளியான எச்சரிக்கை... இந்தியாவுக்கு காத்திருக்கும் பேராபத்து...!

    மேலும் படிங்க
    ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு புதிய அப்டேட்..!! AI Content Label-ஐ அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்..!!

    ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கு புதிய அப்டேட்..!! AI Content Label-ஐ அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்..!!

    மொபைல் போன்
    அதிநவீன ஆவின் பாலகங்கள்... அதிரடி நடவடிக்கையில் விஜய் அரசு..! அமைச்சர் விஜயலட்சுமி அறிவிப்பு..!

    அதிநவீன ஆவின் பாலகங்கள்... அதிரடி நடவடிக்கையில் விஜய் அரசு..! அமைச்சர் விஜயலட்சுமி அறிவிப்பு..!

    தமிழ்நாடு
    ரஷ்ய அமைச்சருடன் போட்டோ எடுக்க மறுத்த ஐரோப்பிய நாடுகள்! G20 மாநாட்டில் வெடித்த புதிய சர்ச்சை!

    ரஷ்ய அமைச்சருடன் போட்டோ எடுக்க மறுத்த ஐரோப்பிய நாடுகள்! G20 மாநாட்டில் வெடித்த புதிய சர்ச்சை!

    உலகம்
    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்! சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்! சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்திலும் அசையாத வீடு!! கம்பீரமாய் நிற்க இதுவே காரணம்! உரிமையாளர் பகிர்ந்த தகவல்!

    நேபாள வெள்ளத்திலும் அசையாத வீடு!! கம்பீரமாய் நிற்க இதுவே காரணம்! உரிமையாளர் பகிர்ந்த தகவல்!

    உலகம்
    அரசியல்வாதிகளுக்கு போராட உரிமையுண்டு! இபிஎஸ் மீதான வழக்குகளை ரத்து செய்த ஐகோர்ட்!

    அரசியல்வாதிகளுக்கு போராட உரிமையுண்டு! இபிஎஸ் மீதான வழக்குகளை ரத்து செய்த ஐகோர்ட்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share