திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் 4 தேதி முதலமைச்சர் பிரச்சாரம் செய்ய அனுமதி பெற்ற நிலையில் அதே இடத்தில் நாம் தமிழர் கட்சி பிரச்சாரம் செய்ய அனுமதி கோரப்பட்டதாகவும் அதனை காவல்துறையினர் நிராகரித்து காமராஜபுரம் பகுதியில் அனுமதி அளித்துள்ளனர். ஆனால் அதனை மீறி வேண்டும் என்று முதலமைச்சர் பயணத்தை சீர்குலைக்கும் வகையில் அப்பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதுடன் சாலை மறியலில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதேபோல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாராபுரத்தில் ரோடு ஷோ சென்ற பாதையில் உரிய அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்ததாகவும், அதனை அகற்றுமாறு பலமுறை அறிவுறுத்தியும் அகற்றாததால் அதனை போலீசார் அப்புறப்படுத்திய நிலையில் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யபப்ட்டுள்ளது.
மேலும் தாராபுரம் காவல் ஆய்வாளரை தரக்குறைவாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பாக ஒரு வழக்கும், காமராஜபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்ற நிலையில், அந்த வழியாக குழந்தையுடன் வீட்டுக்குச் சென்ற தவெக தொண்டர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஒரு வழக்கும் மற்றும் சமூக வலைதளத்தில் முதலமைச்சர் குறித்து அவதூறாக பதிவிட்டது என ஐந்து வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: நாதக கார்த்திகாவுக்கு ரிமாண்ட்.! அதிகாலை கைதும்... 15 நாள் சிறையும்..! பரபரக்கும் தாராபுரம்..!
ஒவ்வொன்றிலும் மூன்று முதல் ஐந்து பிரிவுகள் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டது, அனுமதி பெறாத இடத்தில் பரப்புரை மேற்கொண்டு சட்ட ஒழுங்கு சீர்கேடு ஏற்படுத்தியது, கொலை மிரட்டல், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதன் பேரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா அவரது கணவர் முருகு சந்திரகுமார், விக்னேஷ் பாண்டியன், கந்தசாமி, கோவிந்தராஜ், சஞ்சய் காந்தி, இசை மதிவாணன், சூர்யா, ஷேக் பரித் என 9 பேர் கைது செய்யப்பட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் அவர்களை இரவு 9 மணி அளவில் தாராபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி உமா மகேஸ்வரி முன்பு போலீசார் ஆஜர் படுத்தினர்.
5 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்த விசாரணையில் போலீசார் தரப்பில் சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆதார் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் அவர்களிடம் நீதிபதி நேரடியாக விசாரணை மேற்கொண்டார். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நன்மாறன் தனது வாதங்களை முன் வைத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் போலீசார் கொடுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்தார். அதிகாலை இரண்டு முப்பது மணி அளவில் விசாரணை நிறைவடைந்த. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உட்பட 9 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து 9 பேரையும் போலீசார் கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர்.
இதனிடையே கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லும் முன், அதிகாலை 3 மணிக்கு கைது செய்து போலீசார் கொண்டு சென்றனர். நாங்கள் என்ன மெத்தப்பட்ட மைன் கடத்தினோமா?. சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தோமா?. தேர்தலில் போட்டியிட்டது ஒரு குற்றமா?. இந்த “அராஜக ஆட்சி ஒழிக”, “ கோமாளி விஜய் ஆட்சி ஒழிக” என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா வாகனத்தில் ஏறும் பொழுது கோசமிட்டதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: "விஜய் ஆட்சி ஒழிக"..! மருத்துவ பரிசோதனைக்குச் சென்ற கார்த்திகா கண்டன முழக்கம்.!!