இறந்த மகளின் உடலை பணம் இல்லாததால் 14 கிலோ மீட்டர் தள்ளுவண்டியில் தந்தை கொண்டு சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளி மது பிந்தானி. பழங்குடியினரான இவர், உயிரிழந்த தனது 17 வயது மகனின் உடலை பணம் இல்லாத காரணத்தால் தள்ளுவண்டியிலேயே எடுத்துச் சென்றுள்ளார்.
ஒடிசாவில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி மது பிந்தானி என்பவருக்கு மனநலம் பாதித்த மகள் ஒருவர் இருந்துள்ளார். ஆஷா என்ற அவரது மகள் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

வறுமையில் இருக்கும் மது பிந்தானி ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் தனது மகனின் உடலை தள்ளு வண்டியிலேயே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு ஆஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாலியபால் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லுமாறு போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. தனியார் சேவை ஆம்புலன்ஸ் ஒன்று உடலை ஏற்றிச் செல்ல ரூ.1,200 கேட்டதால், அரசின் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லாது என்று கூறப்பட்டது.
இதையும் படிங்க: பேராசிரியரின் குரூர புத்தி! தட்டி கேட்காத கல்லூரி.. தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி..!
காசு இல்லாததால், உள்ளூர் மக்களிடம் உதவி கேட்டபோது யாரும் தர முன் வராததால் ஒரு ஆட்டோ ஓட்டுநர் முன்வந்து தனது தள்ளுவண்டியை பயன்படுத்த கொடுத்து ள்ளார். மது தனது மகளின் உடலை அந்த தள்ளுவண்டியில் கொண்டு சென்ற அவர், பிரேத பரிசோதனை முடிந்ததும், அ,தே வண்டியில் உடலை இறுதி சடங்குகளுக்காக மீண்டும் 7 கி.மீ வீட்டிற்கு எடுத்துச் சென்றார். தள்ளுவண்டியில் உடலை கொண்டு செல்லும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இதையும் படிங்க: புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டத்தில் பெரும் சோகம்.. கூட்ட நெரிசலில் 3 பக்தர்கள் உயிரிழப்பு..!