ஆண்டுதோறும் காசநோய் கல்லீரல் தொற்று, புற்றுநோய், இளம்பிள்ளை வாதம், கக்குவான் இருமல் உள்ளிட்ட 11 வகையான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்பது புள்ளி 40 லட்சம் குழந்தைகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட பதினோராயிரம் இடங்களில் தடுப்பூசி போடப்படுவதாக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 100 சதவீதம் என்று தடுப்பூசி என்ற நிலை தமிழகத்தில் கேள்விக்குறியாகவே நீடித்து வந்தது. இதற்கு தேதி தடுப்பூசி தேதியை மறப்பது, புலம்பெயர்தல், போதிய அறிவுறுத்தல் இல்லாததால் இந்த பற்றாக்குறை நிலை ஏற்படுவதாக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக இந்த நிலையை சீர் செய்ய நினைத்த தமிழக அரசு 100% தடுப்பூசி என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. முதலில் துணை ரீதியாக பல்வேறு ஆலோசனைகள் மேற்கொண்டு தற்போது இந்த தடுப்பூசி இலக்கை அமலுக்கு கொண்டு வந்தது.
இதையும் படிங்க: நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: மும்மொழி, ட்ரம்ப் வரி உள்ளிட்ட விவகாரங்களை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
இது குறித்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, மாவட்டத்திலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் 100% தவணை தவறாமல் தடுப்பூசி வழங்குவதை மாவட்ட சுகாதார அதிகாரிகள் கண்காணிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இரண்டாவதாக எந்தெந்த சுகாதார மாவட்டம் தடுப்பூசி செயல்பாட்டில் பின்தங்கியுள்ளது அதற்கான காரணம் என்ன என்பதை கண்டறிந்து அம்மாநில சுகாதார அதிகாரிகள் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.இவை மட்டுமின்றி அம்மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளை போல தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி போடும் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் அதற்கான பணிகள் முழு முயற்சியில் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்துக்கள் கோபப்படுவார்கள்: ஆர்எஸ்எஸ்-க்கு எதிராகப் பேசாதீர்கள்…. ராகுலுக்கு அட்வைஸ்