வானில் விரைவில் நட்சத்திரம் ஒன்று வெடித்து சிதற உள்ளது 80 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்த அதிசய நிகழ்வு விரைவில் நிகழ உள்ளது. இதனால் பூமிக்கு ஏதாவது ஆபத்து உள்ளதா? என வானியற்பியல் ஆராய்ச்சி நிபுணர் கிறிஸ்பின் கார்த்திக் ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார்.
வானில் பல்வேறு நட்சத்திரங்கள் உள்ளன பல கோடி நட்சத்திரங்களில் ப்ளே ஸ்டார் என்ற நட்சத்திரம் உள்ளது இது இரட்டை அமைப்பு கொண்ட நட்சத்திரமாக உள்ளது வெண்மை நிறமும் ரெட் ஜெயன்ட் நிறமும் கொண்ட இந்த நட்சத்திரம் கிரீட வடிவில் உள்ளது 3000 ஒளி ஆண்டுகளுக்கு அதிகமான தூரத்தில் இந்த நட்சத்திரம் வானில் உள்ளது இந்தநட்சத்திரம் போரியாலிஸ் என்ற நட்சத்திரக் கூட்டத்தில் உள்ளது வெள்ளை பகுதியைக் கொண்ட நட்சத்திரம் சிவப்பு பகுதியில் இருந்து உருவாகக்கூடிய அணுமின்களை உள்வாங்குவதால் இத்தகைய வெடிப்புகள் ஏற்படுகிறது.

இந்த வெடிப்பு ஏற்படும் நிலையில் வெப்ப அணு எதிர்வினை வானில் நிகழும் 3000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளதால் பூமிக்கு இந்த நட்சத்திர வெடிப்பால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. காந்த அலையோ அணு அலையோ இதனால் ஏற்படாது. பூமிக்கு பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கிராமசபை கூட்டத்திற்கு அழைத்து திமுக ஆர்ப்பாட்டம்... அமைச்சர் KKSSR -ஐ ஓடவிட்ட பெண்கள்..!

80 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த நட்சத்திர வெடிப்பு ஏற்படும். கடந்த மே மாதம் 12ஆம் தேதி 1866 ஆம் ஆண்டு ஒரு நட்சத்திர வெடிப்பும், பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி 1946 ஆம் ஆண்டு ஒரு நட்சத்திர வெடிப்பும் ஏற்பட்டது . அடுத்த 80 ஆண்டுகளில் அதாவது 2026 ஆம் ஆண்டுக்குள் இந்த நட்சத்திர வெடிப்பு ஏற்படும். நட்சத்திர வெடிப்பு ஏற்படுவதற்கு முன்பு இந்த குறிப்பிட்ட நட்சத்திரம் தனது பிரகாசத்தில் இருந்து குறைந்து காட்சி தரும்.

தற்போது இந்த நட்சத்திரம் தனது பிரகாச அளவில் இருந்து குறைந்துள்ளது இதனால் இந்த மார்ச் மாதத்தில் இந்த நட்சத்திரம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அது நிகழவில்லை ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த நிகழ்வு நடைபெறும் இந்த வெடிப்பு நிகழும் போது மனித கண்களால் பார்க்க முடியும் இந்த வெடிப்பு முதலில் பிரகாசமாகவும் பின்பு பிரகாசம் குறைந்தும் காணப்படும் ஒரு மாத கால அளவிற்கு இந்த பிரகாசம் அதிகாலை நேரத்தில் தென்படும் இந்த தகவலை கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி கிறிஸ்பின் கார்த்தி கூறினார்.
இதையும் படிங்க: மதுரையில் காவலர் கொடூர கொலை.. அதிரடியில் இறங்கிய போலீஸ்.. குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு..!