கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேரிகையில் ஆண்டுதோறும் விநாயகர் சிலை ஊர்வலம் வெகு விமர்சையாக கொண்டாட்டங்களுக்கு இடையே நடைப்பெறுவது வழக்கம். இஸ்லாமிய பள்ளி வாசல்கள் உள்ள சாலையில் இந்த ஊர்வலம் நடைப்பெறுவதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விரும்பதாக செயலின் காரணமாக இருமதத்தினரிடையே ஏற்ப்பட்ட தகராறு கலவரமாக மாற இருந்தநிலையில், நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டது..
அதன்பின்பு கடந்த 5 ஆண்டுகளாக எவ்வித சிறு சச்சரவின்றி விநாயகர் ஊர்வலங்கள் முன்பை விட வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.. இதற்கு முக்கிய காரணமாக திமுக சூளகிரி ஒன்றிய செயலாளர் நாகேஷ் தலைமையில் நடைப்பெறும் ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் தாங்களாகவே மத நல்லிணக்கத்தை காக்க ஊர்வலத்தில் பங்குபெறும் மக்களுக்கு அறுசுவை அன்னதானங்களை வழங்கி ஊர்வலத்தில் அவர்களும் பங்கெடுத்து வருகின்றனர்.
கேரளா செண்டமேளம், பம்பை, திண்டுக்கல் தப்பாட்டம், வேலூர் டிரம்ஸ், கேரளா இசைக்கருவிகள், கண்ணை கவரும் வண்ணங்களில் மோகினி நடன கலைஞர்கள் என பேரிகை கிராமமே திருவிழா கோலம் பூண்டது.
இதையும் படிங்க: தர்கா அருகே அட்ராசிட்டி... இந்து முன்னணியினர் போலீசார் இடையே கைகலப்பு... முக்கிய நிர்வாகிகள் படுகாயம்...!
நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் சாலைநெடுகிலும் இருக்க, 5 குதிரைகள் மீது அமர்ந்திருக்கும் பிரம்மாண்ட பால விநாயகர் ஊர்வலம் பேரிகையின் அனைத்து தெருக்களிலும் சென்று வந்தது.
மதங்களை கடந்து இந்து, இஸ்லாமியர்கள் பங்கேற்ற சமத்துவ ஊர்வலமாக இருந்தநிலையில், நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் குத்தாட்டம் போட்டது பொதுமக்களுக்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
பண்டிகைகள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென தவிர ஒரு தரப்பிற்கு கொண்டாட்டமாகவும், மற்ற தரப்பினருக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்கிற நோக்கில் நல்லிணக்கத்தை ஏற்ப்படுத்தவே இதுப்போன்ற முயற்சியை மேற்க்கொள்வதாக திமுக ஒன்றிய செயலாளர் நாகேஷ் தெரிவித்தார்.பின்னர் ஊர்வலத்தில் பங்கேற்ற இஸ்லாமியர்களை கவுரவித்து நன்றி கூறினர்.
இதையும் படிங்க: சீனாவில் லேண்ட் ஆன பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு.. பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சியை கண்டு ரசிப்பு..!!