கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே அஞ்செட்டி அடுத்த மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ். இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களது இளைய மகன் ரோகித் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், சிறுவன் ரோகித்தை அதே பகுதியை சேர்ந்த 22 வயதுள்ள வாலிபர் ஒருவரும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் சேர்ந்து கடந்த 2 ஆம் தேதி காரில் கடத்தி சென்றுள்ளனர். முதலில் அவர்கள் அந்த காரை அந்த பகுதியில் விட்டு விட்டு பிறகு மீண்டும் வேறொரு காரில் சிறுவனை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

ரோகித் கடத்தப்பட்டதை அறிந்த பெற்றோர் மற்றும் மாவனட்டி கிராம மக்கள் அஞ்சட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையில், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இருந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி உறவினர்களும், கிராம மக்களும் அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சிறுவனை காரில் கடத்தி சென்றவர்கள் அஞ்செட்டி காட்டுப்பகுதியில் உடலை வீசி சென்றதாக கூறப்பட்டது.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சிறுவனின் பெற்றோரும், உறவினர்களும் அந்த பகுதிக்கு சென்று உடலை தேடியப்போது, அங்கு சிறுவன் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தது தெரிய வந்தது. ரோகித் உடலைக் கண்டு பெற்றோர் கதறி அழுதனர். அதனை தொடர்ந்து சிறுவனின் சடலத்தை மீட்ட அஞ்செட்டி போலீசார் கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. காதல் விவகாரத்தை ஊரில் இருப்பவர்களிடம் கூறி விடுவேன் என சிறுவன் ரோகித் கூறியதாகவும் அதன் காரணமாக அவரை கடத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: பிறப்புறுப்பில் மிளகாய் தூள்... அரக்கத்தனத்தின் உச்சம்! காளியம்மாள் பரபர பிரஸ்மீட்..!

இந்த விவகாரம் தொடர்பாக மகாதேவன் என்ற இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. தன் காதலியுடன் பேசிக்கொண்டிருந்ததை சிறுவன் ரோகித் பார்த்து விட்டதாகவும், அதை ஊர் மக்களிடம் கூறி விடுவேன் எனக் கூறி மிரட்டியதாகவும் இதன் காரணமாக அவரை காரில் கடத்திச் சென்று கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுவன் தனிமையில் இருப்பதை பயன்படுத்தி அவரை கடத்திச் சென்று கொலை செய்ததும் அம்பலமானது.

இதனிடையே, தனது நண்பர்களுடன் சிறுவன் ரோகித் கிரிக்கெட் விளையாட நடத்த சென்ற சிசிடிவி காட்சிகளும், கொலைக்கு முன்னதாக மகாதேவனும் சிறுவனும் சாலையில் நடந்த செல்லும் காட்சிகளும் வெளியாகி உள்ளன. இந்த விவகாரத்தில் அவரது காதலிக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் இளம் பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அஞ்செட்டி காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தப்படும் நிலையில், கொடையில் தொடர்பு இருக்கும் பட்சத்தில் அவரும் கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: அமைச்சர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு.. நூலிழையில் தப்பிய அதிர்ச்சி சம்பவம்..!