கேரளாவை சேர்ந்தவர்களும் அமெரிக்காவில் பணிபுரிந்து அங்கேயே வசித்து வருபவர்களுமான வெளிநாட்டு வாழ் இந்திய இளம் பெண்களும் சகோதரிகளுமான மீரா பிலிப்( 35) ஆனி பிலிப்( 32) ஆகியவர்கள் குமரிக்கு சுற்றுலா வந்த நிலையில் திடீரென மாயம். கன்னியாகுமரி காவல் நிலையத்தில் உறவினர் புகார்.மாயமான சகோதரிகளை போலிஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிலிப்.இவரது மனைவி மேரி. இந்த தம்பதிக்கு எலிசபெத் பிலிப்,ஆனி பிலிப்,மீரா பிலிப் என மூன்று மகள்கள் உள்ளன.இதில் மூத்த மகள் திருமணமாகி லண்டனில் வசித்து வருகிறார்.ஆனி பிலிப்( 35) எஸ்ரே டெக்னீசியன் படித்துள்ளார். மீரா பிலிப்( 32) பொறியியல் படித்துள்ளார். இரு சகோதரிகளும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து அங்கேயே பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.
இவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை தாயகம் திரும்பி தனது சொந்த ஊரான கோட்டயத்திற்கு வருவது வழக்கம். அதன்படி இந்த வருடமும் அமெரிக்காவில் இருந்து சொந்த ஊர் வந்த அவர்கள் ராமேஸ்வரம், மதுரை போன்ற சுற்றுலா தலங்களுக்கு சென்றுள்ளார்கள்.இதனை தொடர்ந்து இரு சகோதரிகளும் கடந்த 26 ம் தேதி மாலை குமரி சுற்றுலா தலத்திற்கு வந்துள்ளார்கள்.பின்னர் குமரியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்கள்.
இதையும் படிங்க: இனி ஒரு உயிர் போகாது... குமரி மக்களுக்கு இன்று முதல் விடிவு காலம்... மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு...!
இதனை அடுத்து விடுதியில் இருந்து வெளியேறிய அவர்கள் இரண்டு நாட்கள் ஆகியும் விடுதிக்கு வரவே இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி நிர்வாகம் இது குறித்து மயாமான சகோதரிகள் கொடுத்த தொடர்பு எண்ணை அழைத்த பொழுது அவரது தாய் மேரி என்பவர் பேசியுள்ளார். இதனை தொடர்ந்து சகோதரிகள் இருவரும் மாயமான தகவலை அவரது தாயாரிடம் விடுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது என தெரிகிறது.
இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்த தாய் மேரி தனது மகள்களின் பெரியப்பாவான ஷிஜூவை குமரிக்கு அனுப்பி வைத்தார். குமரி வந்த ஷிஜூ மாயமான சகோதரிகளை குமரி சுற்றுலா தலத்திலும் மற்றும் மாவட்டம் முழுவதும் தேடி பார்த்தார்.
ஆனால் சகோதரிகள் இருவரையும் கண்டு பிடிக்க முடியவில்லை.இதனை அடுத்து ஷிஜூ கன்னியாகுமரி காவல் நிலையம் சென்று மாயமான சகோதரிகள் இருவரையும் கண்டு பிடித்து தரும்மாறு புகார் கொடுத்தார்.இதன்படி புகாரை பெற்று கொண்ட போலிஸார் மாயமான சகோதரிகள் இருவரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள்.குமரிக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்களான சகோதரிகள் இருவர் மாயமான சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இதுமட்டும் நடந்துட்டா! தேர்தல்ல இருந்தே விலகிடுறேன்!! பாஜக, காங்., கட்சிகளுக்கு சீமான் சவால்!