''ஆங்கில இணையதளமான தி வயர் மற்றும் கரண் தாபர் தங்களுடன் இணைந்து இந்தியாவிற்கு எதிராக தவறான தகவல்களை பரப்புவதாக நேரடி தொலைக்காட்சியில் ஒரு பாகிஸ்தான் பத்திரிகையாளர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் முன்னணி ஆங்கில இணையதள ஊடகமான thewire.in (தி வயர்) இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை விதைத்து வந்ததால் மத்திய அரசால் முடக்கப்பட்டது. இது தொடர்பாக தி வயர் இணையதளம் வெளியிட்ட அறிக்கையில், அரசியல் சாசனம் வழங்கியுள்ள பத்திரிகை சுதந்திரத்தை மீறும் வகையில், இந்திய அரசு தி வயர் thewire.in இணையதளத்தை இந்தியா முழுவதும் முடக்கி உள்ளது. ஐடி சட்டம் 2000-ன் கீழ் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவால் தி வயர் இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக இணைய சேவை வழங்குநர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கிய தருணத்தில் உண்மையுடனும் நேர்மையுடனும் செய்திகளை வழங்கும் குரல்கள், ஊடகங்கள் மிகவும் மதிப்புமிக்க சொத்தாக இருக்கும் நிலையில் இத்தகைய தணிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம். இந்த விவகாரத்தில் தேவையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும். 10 ஆண்டுகளாக தொடர்ந்து நீங்கள் அளிக்கும் ஆதரவால் நாங்கள் செயல்பட்டோம். இந்த தருணத்திலும் அனைவரும் ஒருங்கிணைந்து நிற்போம்.
இதையும் படிங்க: இந்தியாவின் எதிர்ப்பையும் மீறியது ஐஎம்எப்..! பாகிஸ்தானுக்கு 100 கோடி டாலர் கடன் வழங்க ஒப்புதல்..!

கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள் அளித்த ஆதரவே எங்களை தொடர்ந்து செயல்படச் செய்துள்ளது. இந்த நேரத்திலும் நீங்கள் அனைவரும் எங்களுடன் நிற்பீர்கள் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். எமது வாசகர்களுக்கு உண்மையான, துல்லியமான செய்திகள் வழங்குவதை எதுவும் தடுத்துவிட முடியாது'' எனத் தெரிவித்து இருந்தது.
பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைவரும், மேற்கு வங்கத்தில் அக்கட்சியின் இணைப் பொறுப்பாளருமாக இருந்த அமித் மாளவியாவின் புகாரின் பேரில், 'போலி செய்திகளை' வெளியிடுவதாகக் கூறி 'தி வயர்' மீது மோசடி குற்றம் சாட்டி டெல்லி போலீஸார் கடந்த 2022ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து இருந்தனர். பின்னர் தி வயர் நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் செய்தி நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பி உள்ளது. அதில் ஒரு பத்திரிகையாளர், '' தி வயர் மற்றும் கரண் தாப்பருடன் இணைந்து இந்தியாவிற்கு எதிராக தவறான தகவல்களைப் பரப்பி வருவது உண்மைதான்'' எனத் தெரிவித்துள்ளார்.

பேச்சு சுதந்திரம் என்பது ஒரு விஷயம். ஆனால் அது விரோத நாடுகளுடன் ஒருங்கிணைந்த தவறான தகவல்களைக் வழங்கும்போது அது பத்திரிகை அல்ல, துரோகம்.
இந்திய பத்திரிக்கையாளர்களின் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறனர். 2025-ல் 'ஆபரேஷன் சிந்தூர்' போன்ற இராணுவ நடவடிக்கைகளால் இந்தியா-பாகிஸ்தான் உறவுகளின் சூழலை மீட்டெடுக்க ஊடகங்களின் ஒத்துழைப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. ஏனென்றாபல் அவை அணு ஆயுதம் ஏந்திய நாடுகளுக்கு இடையே பதட்டங்களை அதிகரிக்கக்கூடும். மோதல் மண்டலங்களில் ஊடகங்களின் செயல்பாடுகளை விமர்சன ரீதியாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

சிறிது காலமாக நம் கண்களையும், காதுகளையும் திறந்து வைத்திருப்பவர்களுக்கு இது தெரியும். ஆனால் பெரும்பான்மையானவர்கள் இன்னும் அவர்கள் பரப்பும் ஒவ்வொரு பொய்யையும் குருட்டுத்தனமாக நம்புகிறார்கள். இந்த ஊடகங்கள் இனி பயங்கரவாதிகளின் ஊதுகுழல்கள் அல்ல; அவர்களே பயங்கரவாதிகள். அந்த் ஊடகங்கள் மூடப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்'' என்கிறார்கள்.
''கரண் தாப்பரின் தந்தை பிரேம் நாத் தாப்பர், 1962 இந்திய-சீனப் போரின் போது ராணுவத் தளபதியாக இருந்தார். ஆனால் அவர் கரண் தாப்பருக்கு தேசியவாதம், தேசபக்தி பற்றி கற்பிக்கத் தவறிவிட்டார். அவரது சகோதரி ரோமிலா ஏற்கனவே இந்திய இந்து வரலாற்றை அழித்துவிட்டார். காஷ்மீர் முன்னாள் ஆளுநர் மாலிக். கரண் தாப்பரைப் போலவே மோடிக்கும் முற்றிலும் எதிரானவர். அவர்கள் பாஜகவிற்கும் மோடிக்கும் முற்றிலும் எதிரானவர்கள்.

மோடி மீதான வெறுப்பில் இந்த மக்கள் இந்தியாவை அழிப்பார்கள். தேசத்துரோகத்திற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும். நாம் ஏன் தேசத் துரோகிளுக்கு உணவளித்து அவர்களை உயிருடன் வைத்திருக்க விரும்புகிறோம்? இதுதான் சரியான நேரம், அவர்களை கைது செய்யுங்கள் என கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
இன்னும் சிலரோ, ''பாகிஸ்தானியர்கள் சொல்லும் எதையும் நம்பாதீர்கள். கரண் தாப்பர் பற்றிய பல்வேறு கருத்துக்கள் நமக்கு இருக்கலாம். ஆனால் நிச்சயமாக ஒரு பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஆதாரமாக இருக்க முடியாது. மற்றொரு இந்தியரை வெறுக்க வைக்க அவர்கள் எந்த தந்திரத்தையும் முயற்சிப்பார்கள்'' என எச்சரித்து வருகிறனர்.
A Pakistani journalist openly admitting on live TV that The Wire and Karan Thapar collaborate with them to spread misinformation against India.
Freedom of speech is one thing but when it crosses into coordinated disinformation with hostile states, it’s not journalism, it’s… pic.twitter.com/YQjvtXEVBs
— Itiha (@itiha29) May 9, 2025
இதையும் படிங்க: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. மொத்தமாக 4 விமான தளம் காலி.. இந்தியாவின் மரண அடியில் நொறுங்கும் பாக்.,!