மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான தண்டாயுதபாணி மலையில், 100 கோடி ரூபாய் மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பதிவு செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர்தீன் சிறையில் உயிரிழந்திருக்கிறார்.
இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், கைது செய்யப்பட்ட அன்வர்தீன் மதுரை மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதையும் படிங்க: 100 கோடி நில மோசடி வழக்கில் அதிரடி திருப்பம்... சிக்கிய 3 பேருக்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்...!
இந்த நிலையில், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு சர்க்கரை நோய் மற்றும் பக்கவாதம் தொடர்பான பாதிப்புகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சிறையில் இருந்தபோது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்திருக்கிறார்.
அவரது உயிரிழப்பு தொடர்பாக சிறைத்துறை மற்றும் காவல்துறையினர் சட்டப்படி மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் பழனி நில மோசடி விவகாரம்... கையில் ஆவணத்துடன் சிபிசிஐடி-யிடம் வந்த முக்கிய அதிகாரி...!