தமிழ்நாட்டின் நிர்வாக அமைப்பில் தனது திறமையும் அர்ப்பணிப்பும் மக்களிடம் பெரும் மரியாதையைப் பெற்றவர், ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன். கொரோனா தொற்றின் கரும்புயல் காலத்தில் சுகாதாரத்துறையை திறம்பட நடத்தி, மக்களின் உயிர்களை காப்பாற்றிய அவரது பெயர் இன்றும் ஏராளமானோரின் நினைவில் பதிந்துள்ளது. ஆனால், அந்தப் பெயர் இன்று சோகத்தின் சாயலில் மாறியுள்ளது. வெறும் 56 வயதில் அவர் உலகை விட்டு பிரிந்த செய்தி, தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களை அதிர்ச்சியடையச் செய்தது. இது வெறும் ஒரு அதிகாரியின் மறைவு மட்டுமல்ல. ஒரு அர்ப்பணிப்பு மனதின் அகால இழப்பாகும்.
அவர் எரிசக்தித் துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்தார். அங்கு, மின்சார விநியோகம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்கள், தமிழ்நாட்டின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டங்களை அவர் வகுத்து நடைமுறைப்படுத்தினார். அவரது தலைமையில், துறை சிறப்பான முன்னேற்றத்தைப் பெற்றது,

கடந்த இரண்டு மாதங்களாக, அவர் உடல்நலக் குறைவால் துன்புற்றார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மூளை புற்றுநோயால் (பிரெயின் கான்சர்) பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரியவந்தது. அந்தக் கடுமையான நோய், அவரது உடல் வலிமையைப் படிப்படியாகக் குறைத்தது. இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பீலா வெங்கடேசன் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் "மொபைல் முத்தம்மா"... இனிமே EASY தான்... மக்கள் மத்தியில் வரவேற்பு...!
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகம் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று பீலா வெங்கடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது தமிழக அமைச்சர்கள் கே.என் நேரு, மாசுபிரமணியன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிப்பவர் சேகர்பாபு... புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்...!