விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையைக் கொண்டாடச் சொந்த ஊர்களுக்குச் சென்ற தென் மாவட்ட மக்கள் விடுமுறை முடிந்து சாரை சாரையாகச் சென்னைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர் இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மக்கள் சாரையாக வர தொடங்கியுள்ளனர்
நாளை பள்ளி கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கவுள்ள நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் மூலம் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர்
வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விடுகின்றன அங்கிருந்து சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து பேருந்து நிலைய வளாகத்திற்குள் இருக்கும் மாநகரப் பேருந்து மூலம் பயணம் மேற்கொள்கின்றனர்
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் மின்சாரம் குறித்து முக்கிய அறிவிப்பு! மின் வாரியம் சொன்ன தகவல் இதோ!
ஒரே நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் வந்து இறங்குவதால் கிளாம்பாக்கம் பகுதியில் கடுமையான கூட்ட நெரிசல் காணப்படுகிறது பயணிகள் தங்களின் இடங்களுக்கு எளிதாகச் செல்லும் வகையில் கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன இருப்பினும் அதிகப்படியான மக்கள் ஒரே நேரத்தில் பேருந்து நிலையத்திற்கு வருவதால் மாநகர பேருந்திற்கு காத்திருந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது...!!
மூன்று நாட்கள் விடுமுறை முடிந்த நிலையில் மக்கள் மீண்டும் சென்னை நோக்கி படையெடுத்துள்ளனர் இதனால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றது. சிங்கபெருமாள்கோவில் திருத்தேரி என 2 கிலோ மீட்டர்தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றது.
சிறப்பு பேருந்து ஏற்பாடுகள் என்னென்ன?
விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக செப்டம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் மொத்தம் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மற்றும் திண்டுக்கல்லில் இருந்து 300, திருச்சியில் இருந்து 255, சேலத்தில் இருந்து 200, கிருஷ்ணகிரி–ஓசூர்–வேலூர் பகுதிகளில் இருந்து 195, கும்பகோணத்தில் இருந்து 225, திருவண்ணாமலையில் இருந்து 325, விழுப்புரத்தில் இருந்து 185 சிறப்புப் பேருந்துகள் உள்ளிட்டவை இயக்கப்பட உள்ளன. மேலும், செப்டம்பர் 14 மாலை மற்றும் இரவு நேரங்களில் 50 சிறப்புப் பேருந்துகள் மூலம் 400 கூடுதல் பயண நடைகளும், செப்டம்பர் 15 அதிகாலை முதல் மேலும் 150 கூடுதல் பயண நடைகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை நகருக்குள் பயணிகள் எளிதாகச் செல்லும் வகையில் கோயம்பேடு, இராயபுரம், தீவுத்திடல், திருவான்மியூர், மாதவரம், ஆவடி, பூந்தமல்லி, தாம்பரம், கிண்டி, வேளச்சேரி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ரயில் மூலம் சென்னை திரும்பும் பயணிகளுக்கும் கூடுதல் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது
இதையும் படிங்க: பள்ளத்தில் விழுந்து பெண் பலியான விவகாரம்... சென்னையை அதிரவிட்ட சம்பவத்தில் போலீஸ் அதிரடி ஆக்ஷன்...!