சென்னை, இந்தியாவின் மிகவும் நெரிசலான நகரங்களில் ஒன்றாக இருக்கும் இந்தப் பெருநகரத்தில், ரயில் நிலையங்களின் அழுத்தம் தினசரி பயணிகளுக்கு சவாலாக மாறியுள்ளது. சென்னை சென்ட்ரல், எக்மோர் மற்றும் தாம்பரம் ஆகியவை ஏற்கனவே மூன்று முக்கிய ரயில் முனையங்களாக செயல்படுகின்றன. இந்த நெரிசலை குறைக்கும் வகையில், தென்னிந்திய ரயில்வேயின் திட்டமிட்ட முயற்சியாக, நகரத்தின் நான்காவது ரயில் முனையம் பெரம்பூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாக, ரூ.342 கோடி மதிப்புள்ள விரிவான திட்ட அறிக்கை சமீபத்தில் ரயில்வே போர்ட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது சென்னையின் ரயில் போக்குவரத்து அமைப்பில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.பெரம்பூர் ரயில் நிலையம், சென்னையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த நிலையம், 1860களில் நிறுவப்பட்டது. இது ராயபுரத்திற்குப் பிறகு சென்னையின் இரண்டாவது பழமையான ரயில் நிலையமாகும்.

தற்போது நான்கு தளங்களுடன் செயல்படும் இந்த நிலையம், தினசரி 40,000க்கும் மேற்பட்ட பயணிகளை சந்திக்கிறது. 140க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள் மற்றும் 29 நீண்ட தூர ரயில்கள் இங்கு நின்று செல்கின்றன. இருப்பினும், நகரின் வளர்ச்சியுடன் இந்த நிலையத்தின் திறன் போதுமானதாக இல்லை. இதன் காரணமாக, தென்னிந்திய ரயில்வே, இந்த இடத்தை நான்காவது கோச்சிங் டெர்மினலாக (coaching terminal) மாற்றும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதன் மூலம், வடக்கு நோக்கிய ரயில்கள் இங்கு தொடங்கி முடிவடையும், இது சென்னை சென்ட்ரலில் உள்ள நெரிசலை கணிசமாகக் குறைக்கும்.
இதையும் படிங்க: ரயிலில் கஞ்சா... கையும் களவுமாக சிக்கிய இளைஞர்கள்... லாடம் கட்டிய போலீஸ்...!
இந்தத் திட்டத்தின் தோற்றம், 2024ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தெளிவுபடுத்தப்பட்டது. முதலில் விள்ளிவாக்கம் நிலையத்தில் அமைக்க திட்டமிடப்பட்ட இந்த முனையம், அங்கு இடப் பற்றாக்குறை காரணமாக பெரம்பூருக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், பெரம்பூரில் ரூ.342 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள 4வது ரயில் முனையத்திற்கான விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பெரம்பூரில் மொத்தம் 7 நடைமேடைகள் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: USE பண்ணிக்கோங்க மக்களே... சென்னையில் செயல்பாட்டுக்கு வந்த SIR உதவி மையங்கள்...!