மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், திமுகவின் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
பாஜகவின் 46ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு, சென்னை கமலாலயத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்த பியூஷ் கோயல், பின்னர் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர், “திமுக என்றாலே வாரிசு அரசியல். திமுகவில் தொண்டர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. குடும்ப ஆட்சியாகவும், ஊழல் நிறைந்த ஆட்சியாகவும் இருந்து வந்தது திமுக ஆட்சி” என்று குற்றம் சாட்டினார்.
மேலும், “தமிழகத்தில் திமுகவின் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். இது மாற்றத்திற்கும், நல்லாட்சிக்குமான நேரம்” என்று அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தேஜ கூட்டணியில் குழப்பங்கல்? அன்புமணி, டிடிவி டெல்லி விசிட்! பியூஸ் கோயல் வருகை ரத்து ஏன்? நயினார் நாகேந்திரன் விளக்கம்!

மயிலாப்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜனைப் பற்றி பேசிய பியூஷ் கோயல், “மயிலாப்பூர் மக்கள் ஜெயலலிதாவின் நல்லாட்சியை விரும்புகிறார்கள். மயிலாப்பூர் மக்கள் தமிழிசைக்கு வாக்களிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
பாஜகவின் நிறுவன தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பியூஷ் கோயலின் இந்தப் பேச்சு கவனத்தை ஈர்த்துள்ளது. திமுகவை நேரடியாக விமர்சித்த அவர், தமிழகத்தில் தே.ஜ. கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நேரத்தில், மத்திய அமைச்சரின் இந்தக் கருத்து பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. திமுகவின் குடும்ப அரசியல் மற்றும் ஊழல் மீதான விமர்சனம் தேர்தல் களத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: கோவையில் திமுக செய்யும் தில்லாலங்கடி!! அண்ணாமலை பகீர்!! அமாவாசை காலத்து டெக்னிக் என விளாசல்!