சுதந்திர தினத்தை ஒட்டி பிரதமர் மோடி தொடர்ந்து 12வது முறையாக இன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார்.
ஆங்கிலேயர் ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுபட்ட 79வது சுதந்திர தினத்தை இன்று இந்தியா கோலாகலமாக கொண்டாடுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி தொடர்ந்து 12வது முறையாக டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார். இது அவரது பதவிக்காலத்தில் ஒரு புதிய மைல்கல்லை குறிப்பிடுகிறது.
அதன்படி, தொடர்ச்சியாக 11 சுதந்திர தின உரைகளை நிகழ்த்திய இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து, ஜவஹர்லால் நேருவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை மோடி பிடித்துள்ளார். 1947 தொடங்கி 1963ம் ஆண்டு வரை தொடர்ந்து 17 முறை நேரு சுதந்திர தின உரையாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நாட்டை துண்டாக்கியதே காங்கிரஸ் தான்! அமித்ஷா கடும் குற்றச்சாட்டு...!
பிரதமர் மோடி செங்கோட்டையில் மூவர்ண கொடியை ஏற்றியதும் இந்திய விமானப்படையின் 2 ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவப்பட்டது. இந்திய விமானப்படையின் இரண்டு Mi-17 ஹெலிகாப்டர்கள் செங்கோட்டைக்கு மேல் பறந்து மலர்களைத் தூவின. ஒரு ஹெலிகாப்டர் மூவர்ணக் கொடியுடன் பறக்க, மற்றொன்று 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பதாகையைக் காண்பிtத்தபடி பறந்தது. மேலும் 21 பீரங்கி குண்டுகள் முழங்க தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திர தினத்தை ஒட்டி பிரதமர் மோடி தொடர்ந்து 12வது முறையாக இன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார்.
இதையும் படிங்க: நாட்டின் 79வது சுதந்திர தினம்! ஒரு லட்சம் போலீசார் குவிப்பு... பாதுகாப்பு வளையத்தில் தமிழகம்..!