முதலாம் இராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். விழாவில் வணக்கம் சோழமண்டலம் எனக் கூறிய பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என்ற வாசகத்தை கூறி வணங்கி உரையை தொடங்குகிறேன் என்றார். இப்போதெல்லாம் நயினார் நாகேந்திரன் பெயர் கூறப்படுகிறது உங்களிடத்தில் உற்சாகம் போவதை காண முடிகிறது என்றும் கூறினார்.
எனது சகாவான இளையராஜாவின் இசை, ஆன்மீக அனுபவம் எனது ஆன்மாவை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டது என்றும் பிரகதீஸ்வரர் ஆலய கட்டுமானம் தொடங்கி 1000 ஆண்டு ஆன அற்புதமான நாளில் சிவனை வழிபடும் பேரு கிடைத்துள்ளது. என்றும் கூறினார்.

இந்தியாவின் 140 கோடி மக்களின் நலனுக்காகவும் நாட்டின் நிரந்தர வளர்ச்சிக்காகவும் வேண்டுதல் வைத்ததாக கூறிய பிரதமர், நாட்டு மக்களின் நலனுக்காகவே எனது வேண்டுதல் இருக்கும் ஹரஹர மகாதேவா என்றார். இங்கு ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியை கண்டபோது எனக்கு பெருமிதமாக இருந்தது எனக் கூறிய அவர், கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை கூடுதல் நேரம் ரசித்து வியந்ததால் நிகழ்ச்சிக்கு வர தாமதம் ஏற்பட்டது என கூறினார்.
இதையும் படிங்க: இளையராஜாவின் இசை மழை! பார்த்து ரசித்து மகிழ்ந்த பிரதமர் மோடி!
அற்புதமான கண்காட்சியை நான் கண்டதன் காரணத்தால் சற்று தாமதமாகிவிட்டது என்றும் கண்காட்சியை கண்ட பின் தான் மனித சமுதாயம் நன்றாக இருப்பதற்கு எத்தனை விசாலமான எண்ணம் இருந்தது கண்டு வியந்ததாக தெரிவித்தார்.
கலாச்சார அமைச்சகத்தின் கண்காட்சியை அனைவரும் கண்டிப்பாக கண்டு களிக்குமாறு வேண்டுகோள் விடுத்த பிரதமர் மோடி, தமிழில் பகவத் கீதையின் இசை தொகுப்பை வெளியிடும் பாக்கியம் தனக்கு கிடைத்ததாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: சோழ தேசத்துக்கு புறப்பட்ட பிரதமர் மோடி! கையசைத்தபடி ரோடு ஷோ... உற்சாக வரவேற்பு