எட்டாவது அரசு முறை பயணமாக ஜப்பான் சென்று உள்ள பிரதமர் மோடி டெல்லியிலிருந்து நேற்று மாலை தனி விமானம் மூலம் டோக்கியோவிற்கு புறப்பட்டார். பிரதமர் மோடி, இன்று காலை ஜப்பான் தலைநகர் டோக்கியோவை சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் இந்திய வம்சாவளியினர் மற்றும் ஜப்பானிய அதிகாரிகளால் மோடி மோடி என்ற முழக்கங்களுடன் வரவேற்கப்பட்டார். டோக்கியோவில் உள்ள ஒரு மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலில் இந்திய சமூகத்தினரை சந்தித்த அவர், இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சார மற்றும் நாகரிக பிணைப்புகளை வலியுறுத்தினார்.

இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, 15-ஆவது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாடு அமைந்தது. இந்த உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் முதல் முறையாக நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். தொடர்ந்து டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா - ஜப்பான் பொருளாதார மன்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு பிரச்சனைக்கு இடையே ஜப்பானில் பிரதமர் மோடி பேசினார்.
இதையும் படிங்க: #BREAKING: துணை ஜனாதிபதி தேர்தல்… NDA கூட்டணி வேட்பாளர் CP ராதா கிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்!
அப்போது, உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாளாக இந்தியா விரைவில் மாற உள்ளது என்றார். இந்திய பொருளாதாரம் நிலையாக உள்ளது என கூறிய பிரதமர் மோடி, இந்தியாவில் பொருளாதாரம் மற்றும் அரசியல் சோழ சீராக உள்ளது என்றார். இந்தியாவின் பொருளாதார நட்பு நாடுகளில் ஜப்பான் முக்கிய இடத்தில் உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதாரம் அரசியலில் நிலைத்தன்மை நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தாங்க! எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!