தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் இன்று தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கடந்த மே 10, 2026 அன்று தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பதால், அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் இம்முறை எதிர்பார்ப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது.
தற்போது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால், இன்றைய தினம் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் புதிய அரசு கொள்கைகள் சார்ந்த அதிரடி அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகுமா என்ற ஆவல் எழுந்துள்ளது. மற்றொருபுறம் தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை தவெக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று முதலமைச்சராக தனது முதல் பிறந்தநாளை கொண்டாடும் விஜய்க்கு தமிழகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைதளங்கள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகள் மூலம் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாரத பிரதமர் மோடியும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: முதலமைச்சராக முதல் பிறந்தநாளை கொண்டாடும் விஜய்... இன்று சட்டப்பேரவையில் வெளியாகிறது ஜாக்பாட் அறிவிப்பு?
முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல்நலத்துடனும் வாழ்ந்து மக்கள் பணியை தொடர்ந்து சிறப்பாக ஆற்றிட இறைவனை பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது சோசியல் மீடியா பக்கத்தில், “மாண்புமிகு @CMOTamilNadu
திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!. தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சீரழிந்துள்ள கூவம், அடையாறை சீரழிக்க வேண்டும்! சீரமைப்பு செயல் திட்டத்தை உருவாக்க முதல்வர் விஜய் உத்தரவு!