பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், கர்நாடக மாநில பாஜகவின் முக்கிய முகமுமான ராமச்சந்திர கவுடா மறைந்த செய்தி மிகுந்த வேதனையளிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கர்நாடகாவில் நமது கட்சியின் வலுவான தூணாகத் திகழ்ந்தவர் ராமச்சந்திர கவுடா என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், ராமச்சந்திர கவுடா அவர்கள் அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்தவும், பல தலைமுறைத் தொண்டர்களுக்குத் துணையாக இருக்கவும் தனது வாழ்நாளின் பல தசாப்தங்களை அர்ப்பணித்தார் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது அர்ப்பணிப்புள்ள பணிகள் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தன என்றும் பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: வணிகங்கள் செழிக்கும், புத்தாக்கம் வளரும்! நியூசிலாந்து வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்!

தன்னலமற்ற உழைப்பைத் தந்த ஒரு மூத்த தலைவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் எண்ணற்ற நலம் விரும்பிகளுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவில் கால்பதித்த பிரதமர் மோடி! மெல்போர்ன் நகரில் உற்சாக வரவேற்பு!