தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், வட்ட தலைவர்கள் மாநில நிர்வாகிகள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கபட்டு வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் 108 பேரும், மாவட்ட தலைவர்கள் 108 பேரும் மாநில நிர்வாகிகள் 50 என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பாமகவின் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், பொதுச்செயாலளர் முரளி சங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், மக, ஸ்டாலின், தீரன், கரூர் பாஸ்கர், வன்னியர் சங்க தலைவர் புதா, அருள்மொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியை வலுப்படுத்துவது, அன்புமணி நீக்கம் செய்யபட்டது குறித்து மாவட்ட செயலாளர்களிடம் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது விவாதிக்கபடுகிறது.
இதையும் படிங்க: பாமக எம்.எல்.ஏ அருளுக்கு புதிய பதவி.. ராமதாஸ் அதிரடி உத்தரவு..!!
எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம், மாவட்டம் தோறும் பொதுக்குழு கூட்டம் நடத்துவது திண்ணை பிரச்சாரம் செய்வது குறித்து விவாதிக்கபப்ட்டு வருகிறது. கூட்டத்தில் பாமக கெளரவ தலைவர் ஜி கே மணி பங்கேற்கவில்லை ஜி கே மணி டெல்லி சென்றுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
பாமகவில் கூட்டணி விவகாரம் தொடர்பாக தான் அப்பா-மகன் இடையே விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பியதாகவும், அன்புமணி பாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனிடையே பாமக, ஓபிஎஸ், டிடிவி தினகரன், தேமுதிக ஆகியோரை ஒன்றிணைத்து தேர்தலில் களமிறங்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பாமக என்னோடது! தேர்தல் ஆணையத்தை அணுக ராமதாஸ் தீவிர ஆலோசனை...!