• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    Ex. அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட்..!! ஆபாசமாக பேசிய வழக்கில் அதிரடி உத்தரவு..!!

    முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Thu, 06 Aug 2026 13:33:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ponmudi dmk case

    சென்னையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே. பொன்முடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் சைவம் மற்றும் வைணவம் ஆகிய இந்து மதப் பிரிவுகள் குறித்தும், பெண்கள் தொடர்பாகவும் ஆபாசமான மற்றும் இழிவான கருத்துக்களை வெளியிட்டார். அவரது பேச்சு சமூக ஊடகங்களில் வீடியோவாக பரவியது. அதில் சைவர்கள் அணியும் விபூதிப் பட்டை மற்றும் வைணவர்கள் அணியும் திருமண் ஆகியவற்றை ஒரு விபசாரியின் பாலியல் நிலைகளுடன் ஒப்பிட்டு, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அவர் பேசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்தப் பேச்சு பரவலான கண்டனத்தை ஏற்படுத்தியது.

    மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும், பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தியதாகவும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்தச் சர்ச்சைக்குப் பின்னர் திமுகவில் அவர் வகித்து வந்த துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அப்போது வனத்துறை அமைச்சராக இருந்த அவர் அமைச்சரவையிலிருந்தும் விலக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையிலான அமர்வு, அவரது பேச்சு வெறுப்புப் பேச்சாகவும் ஆபாசமாகவும் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டு, காவல்துறை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தது.

    case

    பின்னர் இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பும் விசாரணைக்கு வந்தது. காவல்துறை பல புகார்களைப் பெற்றபோதிலும் அவற்றை முடித்து வைத்ததாகத் தெரிவித்த நிலையில், உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. பொறுப்பான பதவியில் இருந்தவர் இத்தகைய பேச்சுகளைத் தவிர்த்திருக்க வேண்டும் என நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.இதற்கிடையே பாஜகவின் மேற்கு மாம்பலம் கவுன்சிலர் உமா ஆனந்த் என்பவர் சென்னை ஜார்ஜ் டவுன் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவைத் தாக்கல் செய்தார். பாரதீய நியாய சன்ஹிதாவின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் மத உணர்வுகளைப் புண்படுத்தியது, வெறுப்பைத் தூண்டியது உள்ளிட்ட குற்றங்களுக்காக பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரினார். மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்தப் புகாரை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, பொன்முடிக்கு சம்மன் அனுப்பி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

    இதையும் படிங்க: தெறித்து ஓடிய நெருக்கமான நண்பர்கள்! உடன் நின்ற சீனியர்கள்! கைதான பிறகே உண்மை புரிந்ததா உதயநிதி?!

    இந்த உத்தரவை எதிர்த்து பொன்முடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஜி.கே. இளந்திரையன் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து, வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டார். அவரது பேச்சு மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும், குற்றவியல் நடவடிக்கைக்கு முகாந்திரம் இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.இந்தப் பின்னணியில் ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்தது. பொன்முடி தரப்பில் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி சவுந்தர் பாண்டியன் இந்த மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டு, பொன்முடிக்கு எதிராக பிணை பெற முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார். தனிநபர் புகார் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றாமல் ஆஜராகாத நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிடிவாரண்ட் காவல்துறையினரால் செயல்படுத்தப்படும்போது பொன்முடி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். 

    இதையும் படிங்க: வார்த்தையை விட்ட வேளாண் துறை அமைச்சர்... எழுந்து நின்று ஆக்ரோஷமாக கத்திய திமுக எம்.எல்.ஏ.க்கள்...!

    மேலும் படிங்க
    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    ஒட்டு மொத்த ஊழல் வழக்குகள் எத்தனை?... தமிழக அரசை சரமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்த நீதிபதி...!

    தமிழ்நாடு
    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழ்நாடு
    சி.எம்.விஜய் இதை அனுமதிக்கக்கூடாது... மீறினால்... தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...!

    சி.எம்.விஜய் இதை அனுமதிக்கக்கூடாது... மீறினால்... தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...!

    அரசியல்
    தொகுதி மறுவரையறை...! தமிழக எம்பிக்களுடன் முதல்வர் விஜய் ஆகஸ்ட் 8-ல் அவசர ஆலோசனை!

    தொகுதி மறுவரையறை...! தமிழக எம்பிக்களுடன் முதல்வர் விஜய் ஆகஸ்ட் 8-ல் அவசர ஆலோசனை!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் கட்டண யோசனையை திரும்ப பெறுக! மத்திய அரசுக்கு சிபிஎம் சண்முகம் பி வலியுறுத்தல்!

    டிஜிட்டல் கட்டண யோசனையை திரும்ப பெறுக! மத்திய அரசுக்கு சிபிஎம் சண்முகம் பி வலியுறுத்தல்!

    இந்தியா
    கோதாவரி - காவிரி இணைப்பை விரைவுபடுத்துக! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம்!

    கோதாவரி - காவிரி இணைப்பை விரைவுபடுத்துக! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share