அரசியல் விமர்சகரும், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகருமான வி. பொன்ராஜ் மீது தமிழ்நாட்டில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகம் பெண் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குறித்து அவர் ஒரு யூடியூப் நேர்காணலில் இழிவாகவும், ஆபாசமாகவும் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
தவெகவின் பெண் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை இழிவுபடுத்தும் வகையில், அவர்களைப் பாலியல் தொழிலாளர்கள் என்று குறிப்பிடும் அளவுக்கு தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி பொன்ராஜ் பேசியதாகக் கூறப்படுகிறது. அந்த நேர்காணல் யூடியூப் சேனலில் வெளியானதால், அது வேகமாகப் பரவியது. இதற்கு தவெக தரப்பில் இருந்து உடனடியாக கடும் கண்டனங்கள் எழுந்தன.
தவெக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் இந்தப் பேச்சுக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தார். அவர், தன் கட்சியின் பெண் உறுப்பினர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்களையும் இழிவுபடுத்தியதாகக் குறிப்பிட்டு, சென்னை மைலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தார்.
இதையும் படிங்க: முதல் முறை அறநிலைய அமைச்சராக பிராமணர் நியமனம்! தவெக அமைச்சரவையில் அதிரடி காட்டிய விஜய்!

இந்த சில நாட்களுக்கு முன்பு அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது வழக்குப்பதிய தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், தவெக பெண் தொண்டர்களை இழிவாக பேசிய விவகாரத்தில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் முன்ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். முதல்வர் விஜய் டிஐஜி இடம் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் பொன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் திரிக்கப்பட்டவை எனவும் அரசியல் பரப்புணர்ச்சி கொண்டவை எனவும் பொன்ராஜ் முன்ஜாமின் கேட்டும் முறையீடு செய்துள்ளார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அதிகார துஷ்பிரயோகம் செய்து தன் மீது வழக்கு பதியப்பட்டு இருப்பதாக பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பெண்களை மிக இழிவான வார்த்தைகளால் விமர்சித்த பொன்ராஜ் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கும் நிலையில் கட்சி தலைவர் மீதுள்ள அன்பு காரணமாக பெண்கள் தெரிவித்த கருத்தை விமர்சகர் விமர்சிக்க மனுதாரருக்கு எந்த அவசியமும் இல்லை என்றும் பொன்ராஜ்க்கு முன்ஜாமின் வழங்கினால் இது போன்ற செயல்களை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: தவெக அமைச்சரவையில் விசிக..! தமிழக அரசியலில் செம சர்ப்ரைஸ்..! சூடு பிடிக்கும் களம்..!!