• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, October 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடங்கவே மாட்டீங்களா?... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த ஆம்னி பேருந்துகள்... கட்டணக் கொள்ளையால் கலங்கும் மக்கள்...!

    சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
    Author By Amaravathi Wed, 14 Oct 2026 09:41:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pooja holidays omni bus charges sky high

    ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால், ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

    ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதால், ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே, ஆயுத பூஜை மற்றும் அடுத்து வரவுள்ள தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது, சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு எத்தனை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும், அவை எந்தெந்தப் பகுதிகளுக்குச் செல்லும் என்பது தொடர்பாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன், நேற்று போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

    அப்போது, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்கதையாகி வரும் நிலையில், அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர், ஆம்னி பேருந்துகள் அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்றும், விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.

    இதையும் படிங்க: மக்களை கவனிங்க..! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா.? புகார் எங்களை அறிவித்த தமிழக அரசு.!

    இருப்பினும், இந்த எச்சரிக்கையையும் மீறி, பல ஆம்னி பேருந்து இயக்குநர்கள் தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகத் தெரிகிறது. வார இறுதி நாள்களுடன் ஆயுத பூஜை விடுமுறையும் சேர்ந்து நான்கு நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளது. இதனால், வெள்ளிக்கிழமை முதல் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். இன்னும் ஒருநாள் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில், இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமைக்குள் பேருந்துக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

    குறிப்பாக, தனியார் பேருந்து முன்பதிவுச் செயலியில் இடம்பெற்றுள்ள கட்டண விவரங்களின்படி, கன்னியாகுமரிக்குச் செல்லும் ஒரு பேருந்தில் இன்று அதிகபட்சமாக ரூ.1,800 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே பேருந்தில் வரும் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமை பயணம் செய்வதற்கு ரூ.3,420 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்ல இன்று ரூ.1,399 கட்டணமாக உள்ள நிலையில், வரும் 16ஆம் தேதி அதே பேருந்தில் பயணம் செய்வதற்கு ரூ.3,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்ல இன்று ரூ.1,200 கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், வரும் வெள்ளிக்கிழமை அதே பேருந்தில் பயணம் செய்வதற்கு ரூ.2,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், சென்னையிலிருந்து கோவைக்குச் செல்ல இன்று ஒரு பேருந்தில் ரூ.1,800 கட்டணம் உள்ள நிலையில், வரும் 16ஆம் தேதி அதே பேருந்தில் பயணம் செய்வதற்கு ரூ.3,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சம்பந்தப்பட்ட தனியார் ஆம்னி பேருந்து இயக்குநர்கள் மற்றும் முன்பதிவுச் செயலியில் கட்டண உயர்வு இடம்பெற்றுள்ளது.

    ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளிடம், வரும் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் வழக்கத்தைவிடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்தக் கட்டணங்கள் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களைவிட அதிகமாக இருப்பதாகவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    மேலும், குறிப்பிட்ட ஊர்களுக்கு நேரடியாக இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் ஏறி குறிப்பிட்ட தொலைவுக்குப் பயணம் செய்பவர்கள்கூட கூடுதலாக ரூ.500 முதல் ரூ.1,000 வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    ஒவ்வொரு பண்டிகைக் கால விடுமுறையின்போதும் ஆம்னி பேருந்து இயக்குநர்களும் முன்பதிவுச் செயலிகளும் தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்துவதாகப் பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். அரசு புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தாலும், தனியார் முன்பதிவுச் செயலிகளையும் தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பண்டிகைக் காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையைத் தவிர்க்க முடியும் என்பதே பயணிகளின் கருத்தாக உள்ளது.

    ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாகப் புகார் அளிப்பதற்கான உதவி எண் ஒன்றையும் அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. அந்த எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளித்தால், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

    மேலும், 30க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

    இருப்பினும், தனியார் முன்பதிவுச் செயலிகளையும் தொடர்ந்து கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
     
    இதையும் படிங்க: “அடப்பாவிகளா 2 முறையா?”... நாகர்கோவில் சபரிவர்மன் லாக்அப் மரணத்தில் அதிர்ச்சி... சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கையில் திகில்...!!

    மேலும் படிங்க
    ஹாக்கி முதல் கிரிக்கெட் வரை..! ஆசிய போட்டிகளில் தூள் கிளப்பிய இந்தியா.. பிரதமர் மோடியை சந்தித்த வீரர், வீராங்கனைகள்..!!

    ஹாக்கி முதல் கிரிக்கெட் வரை..! ஆசிய போட்டிகளில் தூள் கிளப்பிய இந்தியா.. பிரதமர் மோடியை சந்தித்த வீரர், வீராங்கனைகள்..!!

    இந்தியா
    “அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது”..! இயக்கத்தை காப்பது முக்கியம்... சசிகலா திட்டவட்டம்..!

    “அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் வந்துவிட்டது”..! இயக்கத்தை காப்பது முக்கியம்... சசிகலா திட்டவட்டம்..!

    தமிழ்நாடு
    ஞானேஷ்குமாருக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு.? அபிஜீத் திப்கே சரமாரி கேள்வி..!!

    ஞானேஷ்குமாருக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு.? அபிஜீத் திப்கே சரமாரி கேள்வி..!!

    இந்தியா
    ஆவின் பாலுக்கு ஆதார் அட்டையா? தமிழக அரசுக்கு சிபிஐ எச்சரிக்கை!

    ஆவின் பாலுக்கு ஆதார் அட்டையா? தமிழக அரசுக்கு சிபிஐ எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    ஹாட்ஸ்பாட் ஆன திருச்சி கிழக்கு.! நெருங்கியது இடைத்தேர்தல்.? ஆட்சியர் ஆய்வு..!!

    ஹாட்ஸ்பாட் ஆன திருச்சி கிழக்கு.! நெருங்கியது இடைத்தேர்தல்.? ஆட்சியர் ஆய்வு..!!

    தமிழ்நாடு
    அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிய ஓமன்! இந்தியாவின் எரிவாயு இறக்குமதியில் அதிரடி மாற்றம்!

    அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிய ஓமன்! இந்தியாவின் எரிவாயு இறக்குமதியில் அதிரடி மாற்றம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share