எடப்பாடி பழனிச்சாமி துரோகம் செய்து வருவதாக விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் அவருக்கு எதிராக "துரோக பழனிச்சாமியின் துரோக வரலாறு" என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு.
அதிமுகவில் உட்கட்சி ஊசல் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியில் அதிமுகவின் மத்திய மாவட்ட மேற்கு ஒன்றியம் சார்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓட்டப்பட்டுள்ள சுவரொட்டி தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அனைவருக்கும் துரோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த சுவரொட்டியில் 2017 முதலமைச்சர் பதவி கொடுத்த சின்னம்மாவுக்கு துரோகம், 2018 துணைப் பொதுச் செயலாளர் டி டி விக்கு துரோகம், 2022 நான்காண்டு முதலமைச்சர் பதவி அமைவதற்கு துணை நின்ற கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு துரோகம், 2021ல் 10.5% இட ஒதுக்கீடு கொடுப்பதாக சொல்லி அன்புமணி ராமதாஸுக்கு துரோகம், 2024 எம்பி பதவி தருவதாக பிரேமலதா விஜயகாந்திற்கு துரோகம், 2025 கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் அவர்களுக்கு துரோகம், 2026 இல் யாருக்கு துரோகம்? என கேள்விக்குறி எழுப்பி "துரோக பழனிச்சாமியின் துரோக வரலாறு" என்ற வாசகத்துடன் கூடிய சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசு பள்ளி வாயிலை அடைத்து கட்-அவுட்... அதிமுகவினர் அட்ராசிட்டியால் பல்லடம் மக்கள் அவதி...!
இதையும் படிங்க: கொஞ்சம் பொறுங்க... அதிமுக ஆட்சி வரட்டும் எல்லாம் சரியாகும்! இபிஎஸ் நம்பிக்கை