• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விருத்தாசலமா? விருகம்பாக்கமா? குழம்பி தவிக்கும் பிரேமலதா? தேமுதிக சார்பில் போட்டி எங்கே?

    சட்டசபை தேர்தலில் களமறிங்க விரும்பும் தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, தி.மு.க., கூட்டணியில், விருகம்பாக்கம், விருத்தாசலம் ஆகிய இரண்டில் எந்த தொகுதியில் நிற்பது என்ற குழப்பத்தில் இருக்கிறார்.
    Author By Pandian Sat, 14 Mar 2026 15:40:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Premalatha in Dilemma: Virugambakkam or Vriddhachalam? DMDK Pushes for Double-Digit Seats in DMK Alliance – Vijayakanth's Old Stronghold vs Family Sentiment Clash!

    தமிழக சட்டசபை தேர்தல் 2026-இல் தே.மு.தி.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள நிலையில், பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தொகுதி தேர்வில் குழப்பத்தில் உள்ளார். விருகம்பாக்கம் அல்லது விருத்தாசலம் – எந்த தொகுதியில் போட்டியிடுவது என்ற முடிவை இன்னும் எடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.

    தி.மு.க. கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளை தே.மு.தி.க. எதிர்பார்க்கிறது. குறிப்பாக விருகம்பாக்கம் தொகுதியை வலியுறுத்தி கேட்டு வருகிறது. மறைந்த விஜயகாந்த் வீடு சாலிகிராமத்தில் உள்ள இத்தொகுதியில் திரைப்பட ஊழியர்கள் அதிகம் வசிக்கின்றனர். 

    அவர்களின் ஓட்டுகள் தே.மு.தி.க.வுக்கு உறுதுணையாக இருக்கும் என கருதப்படுகிறது. 2011-இல் அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் பார்த்தசாரதி வெற்றி பெற்ற தொகுதி இது. எனவே மீண்டும் அத்தொகுதியை தர வேண்டும் என தே.மு.தி.க. வலியுறுத்துகிறது.

    இதையும் படிங்க: கோவில்பட்டி தொகுதிக்கு குறி! தனிச்சின்னத்தில் போட்டி! சட்டசபையை எதிர்ந்நோக்கி காத்திருக்கும் வைகோ!

    DMDKSeats

    ஆனால் தி.மு.க. தரப்பில், விருகம்பாக்கத்தில் அதிமுக வேட்பாளராக களமிறங்க உள்ள முன்னாள் கவர்னர் வி.என். ரவியை எதிர்த்து பார்த்தசாரதி போட்டியிட்டால் வெற்றி சிரமம் என கருதுகிறது. பிரேமலதா அல்லது அவரது மகன் விஜய பிரபாகரன் இருவரில் ஒருவர் போட்டியிட்டால் மட்டுமே வெற்றி உறுதி என்பதால், தி.மு.க. தலைமை அவர்களில் ஒருவரை விருகம்பாக்கத்தில் நிறுத்த விரும்புகிறது.

    ஆனால் பிரேமலதா விருத்தாசலம் தொகுதியில்தான் போட்டியிட விரும்புகிறார். விஜயகாந்த் கட்சி தொடங்கிய முதல் தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதி இது. தனக்கும் வெற்றி கிடைக்கும் என அவர் நம்புகிறார். தற்போது அத்தொகுதி காங்கிரஸ் வசம் உள்ளது. 

    இதற்கிடையே அதிமுக கூட்டணியில் பாமக எம்எல்ஏ சிவக்குமார் விருத்தாசலத்தில் போட்டியிட விரும்புவதாகவும், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மயிலம் தொகுதிக்கு மாறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாமக போட்டியிட்டால் விருத்தாசலத்தில் சுலபமாக வெற்றி பெறலாம் என பிரேமலதா கருதுவதால், அத்தொகுதியை பிடிவாதமாக கேட்டு வருகிறார்.

    மொத்தத்தில் விருகம்பாக்கமா, விருத்தாசலமா என்ற குழப்பத்தில் பிரேமலதா இருப்பதாக அவரது கட்சியினர் தெரிவிக்கின்றனர். தொகுதி இறுதி முடிவு எப்போது வெளியாகும் என அரசியல் வட்டாரங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றன. தே.மு.தி.க.வின் இந்த தொகுதி கோரிக்கை தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையில் முக்கிய சிக்கலாக எழுந்துள்ளது.
     
    இதையும் படிங்க: வேட்பாளர் தேர்வில் களம் இறங்கும் ராகுல்காந்தி! 28 சீட்டு யாருக்கு? கலக்கத்தில் காங்கிரசார்!

    மேலும் படிங்க
    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    பேரறிவாளன் வழக்கறிஞரா..? "கருப்பு நாள்"... ! காங். எம்.பி சுதா விமர்சனம்..!

    பேரறிவாளன் வழக்கறிஞரா..? "கருப்பு நாள்"... ! காங். எம்.பி சுதா விமர்சனம்..!

    தமிழ்நாடு
    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    குற்றம்
    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    உலகம்
    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    உலகம்
    தனது நாய்க்குட்டிக்கு Happy Birthday-வாம்..!! அதனை கியூட்டாக கொண்டாடிய நடிகை ஷ்ரத்தா கபூர்..!

    தனது நாய்க்குட்டிக்கு Happy Birthday-வாம்..!! அதனை கியூட்டாக கொண்டாடிய நடிகை ஷ்ரத்தா கபூர்..!

    சினிமா

    செய்திகள்

    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    கையில் உடுக்கை, திரிசூலத்துடன்.. காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமர் மோடி..!!

    இந்தியா
    பேரறிவாளன் வழக்கறிஞரா..?

    பேரறிவாளன் வழக்கறிஞரா..? "கருப்பு நாள்"... ! காங். எம்.பி சுதா விமர்சனம்..!

    தமிழ்நாடு
    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    மகளை பாலியல் வன்கொடுமை செய்து சீரழித்த தந்தை! தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிய ஐகோர்ட்!

    குற்றம்
    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    எதிரியை ராணுவ ரீதியாக தோற்கடித்து விட்டோம்!! மீண்டும் தலைதூக்க அனுமதிக்க மாட்டோம்! ட்ரம்ப் சூளுரை!

    உலகம்
    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    இந்தியாவை கூறு போட நினைத்த கயவன் கொலை! லஷ்கர் - இ - தொய்பாவுக்கு அடுத்த அடி! பயங்கரவாதி கதை முடிப்பு!

    உலகம்
    மே 4 ரிசல்ட் வளர்ந்த இந்தியா கனவை மேலும் வலுப்பட்டுத்தும்!! உ.பி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!

    மே 4 ரிசல்ட் வளர்ந்த இந்தியா கனவை மேலும் வலுப்பட்டுத்தும்!! உ.பி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share