கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வெற்றி பெற்ற திருமதி பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதி மக்களுக்கு இன்று நாளை மற்றும் நாளை மறுநாள் மூன்று தினங்களுக்கு தனது நன்றியை வாக்காளர்களுக்கு தெரிவிக்க உள்ளார். இதற்காக இன்று விருத்தாச்சலம் வருகை தந்த அவர் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசுகையில் தேர்தல் வாக்குறுதியாக தான் அளித்த விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிப்பதற்கு முழு மூச்சுடன் ஈடுபடுவதாகவும் மேலும் தேர்தல் வாக்குறுதியில் தாம் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசின் ரத்தன் பண்டிட் அவர்கள் நியமனம் குறித்து தனது பேச்சை சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்த போது அதற்கு உடனடியாக தீர்வு கண்ட தமிழக முதல்வர் அவர்களுக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் 717 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் சிங்கப்பெண் காவல் போன்ற அறிவித்த முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் மேலும் தற்போதைய அரசு சமூகவலைதளம் மற்றும் ரீல்ஸ் நம்பியுள்ளதாகவும் மக்களுக்கு எடுக்க வேண்டிய, செயல்படுத்தக் கூடிய அனைத்து திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் தமிழக வெற்றி கழகம் அளித்த 2500 வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கல்வித் தகுதி குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு அதை அவர்களிடம் தமிழக வெற்றி கழகத்திடம் தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் அமைத்தவர்கள் நிபந்தனை ஏற்ற ஆதரவு இந்த அரசுக்கு வழங்குவதைப் போன்று அதிமுகவிலிருந்து பிரிந்து வந்துள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தால் வரவேற்கலாம் இல்லையென்றால் நிச்சயம் குதிரை பேரம் நடந்திருப்பதாகவே எண்ணப்படும். முகத்தை மூடிக் கொண்டு முதல்வரை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் யார்.? ஒரு பிரிவு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை முதல்வர் சந்தித்தது ஏன்.? எனவே எந்த வித குதிரை பேரமும் நடைபெறவில்லை என்பதை முதல்வர் தான் உறுதி செய்ய வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: முகமூடி நபர் யார்? ... விஜயை விடாமல் விரட்டும் பிரேமலதா விஜயகாந்த்... திமுகவுக்கே டப் கொடுக்கும் தேமுதிக...!
இதையும் படிங்க: “பிரேமலதாவை ஃபினிஷ் பண்ணிடுவோம்”... வாக்காளர்கள் மத்தியில் ஸ்ரீதர் வாண்டையார் சர்ச்சை பேச்சு...!