• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மேட்டூர் அணை தாமதம்.. குறுவை சாகுபடி நாசம்: தவெக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்!

    மேட்டூர் அணை தாமதமாகத் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் சம்பா தொகுப்பு வழங்க நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 15 Sep 2026 16:32:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Protect Kuruvai and Samba Farmers: BJP Nainar Nagenthran Slams TVK Govt Over Mettur Dam

    வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணையைத் திட்டமிடல் ஏதுமின்றி செப்டம்பர் மாதம் வரை காலதாமதமாகத் திறந்து டெல்டா விவசாயிகளின் குறுவை சாகுபடியை அடியோடு நாசமாக்கியுள்ள ஆளும் தவெக அரசு, ஏக்கருக்கு ரூ.10,000-க்கும் மேல் நஷ்டத்தைச் சந்தித்துக் கண்ணீரில் தத்தளிக்கும் குறுவை விவசாயிகளுக்குப் போர்க்கால அடிப்படையில் உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், வரவிருக்கும் சம்பா பருவ சாகுபடியைப் பாதுகாக்கச் சிறப்பு வேளாண் தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் மேட்டூர் அணை நீர் திறப்பில் ஏற்பட்ட கடுமையான காலதாமதமும், பருவமழைப் பற்றாக்குறையும் டெல்டா மாவட்ட விவசாயிகளைப் பெரும் துயரத்திற்குத் தள்ளியுள்ளது. 

    இந்நிலையில், டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரச் சீரழிவைக் கையிலெடுத்து ஆளும் தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் மீது பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் அடுக்கடுக்கான கண்டனக் கணைகளைத் தொடுத்துள்ளார்.

    இதையும் படிங்க: கொடைக்கானல் நாயுடுபுரம் சட்டவிரோத கல்குவாரி! முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

    இது தொடர்பாகத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள நயினார் நாகேந்திரன், தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவில் குறுவை விவசாயிகளையும், அடுத்து வரவிருக்கும் சம்பா பருவத்திற்கான சாகுபடியையும் பாதுகாக்க வேண்டிய தலையாய கடமையிலிருந்து தவெக அரசு முற்றிலுமாகத் தவறிவிட்டது. வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி பாசனத்திற்காகத் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை, அரசின் அலட்சியப் போக்கால் காலதாமதமாகச் செப்டம்பர் மாதத்தில்தான் திறக்கப்பட்டது.

    BJP

    இந்த நிர்வாகக் குளறுபடியின் காரணமாகத் தமிழகத்தின் குறுவை சாகுபடி படுமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பயிர் செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000-க்கும் அதிகமாகக் கடுமையான இழப்பும் நஷ்டமும் ஏற்பட்டுள்ளதாக வெளியாகி வரும் வேதனைச் செய்திகளை முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

    டெல்டாவின் கள நிலவரத்தை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டிய அவர், கோடைக் காலம் முடிந்த பின்னரும் கூடத் தமிழகம் முழுவதும் அனல் காற்று தகித்துக் கொண்டிருக்கிறது; நிலத்தடி நீர் மட்டம் மிகக் கடுமையான பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. மறுபுறம், காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசு தொடர்ந்து அரங்கேற்றி வரும் துரோகச் சூழ்ச்சிகளால் தமிழகத்தின் பாசன நீர்நிலைகள் வறண்டு பாலையாகி வருகின்றன. 

    இதனால் ஏற்கனவே பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் ஒரு சொட்டு நீரின்றி கருகி வருவதுடன், ஒட்டுமொத்த சாகுபடி நிலப்பரப்பும் சுருங்கும் பேராபத்து உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 30,000 ஹெக்டேராக இருந்த குறுவை சாகுபடி, இந்த ஆண்டு வெறும் 1,720 ஹெக்டேராகக் கவலைக்கிடமாகச் சுருங்கிவிட்டது. 

    அதேபோல, திருவாரூர் மாவட்டத்திலும் 77,573 ஹெக்டேரிலிருந்து 46,338 ஹெக்டேராகச் சாகுபடி நிலப்பரப்பு சரிந்துள்ளது. நிலவரம் இவ்வளவு மோசமாக இருக்கும்போது, தவெக அரசு இனியும் கண்மூடித்தனமாகத் தாமதித்தால் தமிழகத்தின் விவசாயக் கட்டமைப்பு முற்றிலுமாக நொடிந்து சின்னாபின்னமாகிவிடும் என்று எச்சரித்துள்ளார்.

    மேலும் அரசுக்குக் கெடு விதித்த நயினார் நாகேந்திரன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடும் போக்கைக் கைவிட்டு, குறுவை சாகுபடியில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய நிவாரணம் மற்றும் இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 

    அத்துடன், எதிர்வரும் சம்பா பருவ சாகுபடியாவது தடையின்றி முழுமையாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் சிறப்பு விவசாயத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் அறிவிக்க வேண்டும் என்று ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் குமுறல் வெடித்துள்ள வேளையில் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள இந்த கண்டன அறிக்கை தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: ரூ.3,383 கோடி சொத்து.. திடீரென பிச்சைக்காரராக மாறிய பாஜக எம்எல்ஏ! மும்பையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

    மேலும் படிங்க
    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    தமிழ்நாடு
    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    தமிழ்நாடு
    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தமிழ்நாடு
    தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்: மதுராந்தகத்தில் சிபிஎம் சுகந்தி, தாராபுரத்தில் சிபிஐ லட்சுமணன் போட்டி!

    தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்: மதுராந்தகத்தில் சிபிஎம் சுகந்தி, தாராபுரத்தில் சிபிஐ லட்சுமணன் போட்டி!

    தமிழ்நாடு
    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share