பிரதமர் நரேந்திர மோடியை டார்கெட் செய்து அமெரிக்காவின் CIA-நடத்திய கொலைச் சதியை, ரஷ்யாவுடன் இணைந்து இந்திய ரகசிய அமைப்பு வெற்றிகரமாக முறியடித்ததாக, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அதிகாரப்பூர்வ ஆங்கில வார இதழான 'ஆர்கனைசர்' அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தச் சதி, சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது (எஸ்.சி.ஓ.) நடக்கவிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்திய-அமெரிக்க உறவில் சமீப காலமாக பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக பதவியேற்ற சில மாதங்களிலேயே, பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத் தாக்குதலை தான் நிறுத்தியதாக திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்.
இதோடு, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி, அமெரிக்க வேளாண் பொருட்களை வாங்க வேண்டும் என்ற நிபந்தனையையும் மோடி ஏற்கவில்லை. இத்தகைய பின்னணியில், ஏழு ஆண்டுகளுக்குப் பின் மோடி, ஆகஸ்ட் 30-ம் தேதி சீனாவின் டியான்ஜின் நகரத்தில் எஸ்.சி.ஓ. மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றார்.
இதையும் படிங்க: பகல் 12 மணிக்கே கடையெல்லாம் மூடுங்க.. புதுவை அரசு அதிரடி உத்தரவு
அங்கு சீன அதிபர் சி ஜின்பிங்கை சந்தித்த மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினுடன் தனிப்பட்ட 45 நிமிட ஆலோசனை நடத்தினார். இது கார் உள்ளேயே நடந்தது, உலக அரங்கை அதிரச் செய்தது. மாநாட்டுக்குப் பின் செப்டம்பர் 1-ம் தேதி இந்தியா திரும்பிய மோடி, அடுத்த நாள் டெல்லியில் நடந்த செமிகான் உச்சி மாநாட்டில் பேசினார்.
அப்போது தனது பேச்சைத் தொடங்கியதும், கூட்டத்தினர் ஆரவாரமாகக் கைதட்டினர். அதைப் பார்த்து மோடி சிரித்துக்கொண்டே கூறினார்: "நான் சீனா சென்றதற்காகக் கைதட்டுகிறீர்களா? இல்லை, சீனாவிலிருந்து திரும்பி வந்ததற்காகவா?"
இந்த வார்த்தைகளின் பின்னணியில் ரகசியங்கள் இருப்பதாக 'ஆர்கனைசர்' சுட்டிக்காட்டுகிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி, வங்கதேச தலைநகர் டாக்காவில் அமெரிக்க ராணுவ அதிகாரி டெரன்ஸ் ஆர்வெல் ஜாக்சன் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை அமெரிக்க தூதரக அதிகாரிகள் அவசரமாகக் கைப்பற்றினர்.

இந்தச் சம்பவத்தை இணைத்து, 'ஆர்கனைசர்' கூறுகிறது: டாக்காவில் உள்ள அமெரிக்க அதிகாரி, மோடியை கொல்ல திட்டமிட்டிருந்தவர். இந்தச் சதியை அறிந்து, இந்திய ரகசிய சேவை (RAW) மற்றும் ரஷ்ய உளவுத்துறை (SVR) இணைந்து செயல்பட்டனர். சீன உளவுத்துறையின் (MSS) உதவியுடன், அமெரிக்க அதிகாரியை நடுநிலையாக்கி, சதியை முறியடித்தனர். புடின் தனது பாதுகாப்பான காரை அனுப்பி, மோடியை பாதுகாத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் செய்தி, ஆர்.எஸ்.எஸ். இதழ் என்பதால், பிரதமர் அலுவலகம் அல்லது அரசு அதிகாரிகள் தெரிந்துகொண்டே வெளியிட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த 2022-ல் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயை தேர்தல் கூட்டத்தில் சுட்டுக் கொன்றது போல, மோடிக்கும் அத்தகைய ஆபத்து இருந்திருக்கலாம் என சமூக வலைதளங்களில் பலர் விவாதித்து வருகின்றனர்.
இந்தியாவின் 'தன்னாட்சி' கொள்கைக்கு எதிராக அமெரிக்காவின் 'சதித்திட்ட' முயற்சி தோல்வியடைந்ததாகவும், இது இந்திய-ரஷ்ய உறவின் வலிமையை வெளிப்படுத்துவதாகவும் நிபுணர்கள் கருதுகின்றனர். இதுகுறித்து அரசு எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.
இதையும் படிங்க: டிஜிபி ஆபீசுக்கு பறந்த வெடிகுண்டு மிரட்டல்… சோதனையே வேண்டாம்! நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு…!