வாக்காளர் சிறப்பு திருத்தத்தை காங்கிரஸ் சொல்லிட்டு எதிர்கட்சிகள் எதிர்த்து வருகின்றன. ஏனெனில் ஏராளமான மக்களின் வாக்குரிமையை இது பறிப்பதாக அமையும் என்று கூறி இருக்கின்றனர்.
இருப்பினும் முதலில் பிஹாரில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடங்கப்பட்டு இந்தியா முழுவதும் நடைபெறும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
அதன்படி பிஹாரில் வாக்காளர் சிறப்பு திருத்தம் நடத்தப்பட்டு வருகிறது. 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்துள்ளனர்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பயன்படுத்துகிறது பாஜக... முதல்வர் ஸ்டாலின் சரமாரி சாடல்!
இந்த நிலையில் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் சூழ்நிலையில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க கோரி ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கினர்.
மேலும் அவை நடவடிக்கைகள் தொடங்கியதும் அமலியில் ஈடுபடும் எதிர்க் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்திலும் ஈடுபடுகின்றனர். இருப்பினும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.

இந்த நிலையில், இந்தியா கூட்டணி இன்று பேரணி நடந்த இருப்பதாக அறிவித்து உள்ளது. பீகார் மாநில வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கண்டித்து, நாடாளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி இந்தியா கூட்டணி எம்பிக்கள் இன்று பேரணியாக சென்றனர்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பேரணியாக சென்ற எம்.பி.க்களை டெல்லி காவல்துறை கைது செய்தது.
வாக்குகள் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த தேர்தல் ஆணையம் நோக்கி போலீசாரின் தடையை மீறி செல்ல முயன்ற பிரியங்கா காந்தி, கனிமொழி, அகிலேஷ் யாதவ், மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட எம்பிக்களை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடும் இந்தியா கூட்டணி எம்பிக்கள்… உச்சகட்ட பரபரப்பு!