மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று (ஆகஸ்ட் 1) சென்னை வந்தடைந்தார். தமிழக காங்கிரஸ் சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெறும் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக அவர் வருகை தந்ததை முன்னிட்டு, சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கட்சிக் கொடிகளை ஏந்தியபடி முழக்கங்கள் எழுப்பிய தொண்டர்கள், ராகுல் காந்தியை உற்சாகமாக வரவேற்றதால் விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவியது.
காலை 10 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த ராகுல் காந்தி, பின்னர் சாலை மார்க்கமாக மாமல்லபுரத்துக்கு புறப்பட்டார். காலை 11.30 மணியளவில் அங்கு நடைபெறும் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாமின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
இதையும் படிங்க: நாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி! முதல்வர் விஜய் உடன் சந்திப்பு கன்ஃபார்ம்? வெளியானது முக்கிய தகவல்!
அவரது வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

#WATCH | Tamil Nadu: Lok Sabha LoP Rahul Gandhi arrives in Chennai. He will interact with Congress district presidents on the final day of Tamil Nadu Congress District Presidents' training camp today. pic.twitter.com/Z1ggSzYLwE
— ANI (@ANI) August 1, 2026
இந்த பயிற்சி முகாமில் தமிழகத்தின் 74 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் ராகுல் காந்தி நேரடியாக கலந்துரையாடி, கட்சியின் அமைப்பு வலுப்படுத்துதல், உறுப்பினர் சேர்க்கை, எதிர்கால தேர்தல் வியூகங்கள், மக்களைச் சென்றடையும் அரசியல் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களையும் ராகுல் காந்தி தனியாக சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள், கூட்டணி தொடர்பான ஆலோசனைகள் மற்றும் கட்சியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் இந்த பயணத்தின் போது முக்கிய விவாதங்கள் நடைபெறலாம் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் ராகுல் காந்தியின் தமிழக வருகை அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ள முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ராகுல் காந்தியை ஏன் பேச விடவில்லை?"... நாடாளுமன்ற வளாகத்தில் முழங்கிய INDIA கூட்டணி! சூடுபிடித்த டெல்லி அரசியல்!