சென்னையைச் சேர்ந்த முன்னணி இருசக்கர வாகன பந்தய வீராங்கனை ஜெகதீஸ்ரீ குமரேசன், ஆசிய அளவிலான பைக் ரேசிங் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த ஜெகதீஸ்ரீ, இந்தியாவில் கடந்த இரு ஆண்டுகளாகத் தேசிய அளவிலான பைக் ரேசிங் சாம்பியனாகத் திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், Federation of Motor Sports Clubs of India (FMSCI) சார்பில் இந்தியாவுக்காக ஆசிய பந்தயக் களத்தில் போட்டியிடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.
ஆசியாவின் முன்னணி 10 சிறந்த ரைடர்களில் ஒருவராகக் களமிறங்கிய ஜெகதீஸ்ரீ, அந்தப் பந்தயக் களத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்த முதல் இந்திய வீராங்கனையாகப் பெருமை சேர்த்துள்ளார். இது தொடர்பாக ஜெகதீஶ்ரீ கூறுகையில், "நான் ஜெகதீஸ்ரீ, சென்னையச் சேர்ந்தவள். கடந்த ரெண்டு வருடமாக நான்தான் தேசிய சாம்பியன்.

இந்த வருடம் இந்தியா சார்பில் ஆசியப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது. அங்கே போட்டியிட்ட டாப் 10 ரைடர்களில் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்து சிறப்பாக ரேஸ் ஓட்டினேன். அந்த டிராக்கில் இதுபோல சாதித்தது தானே முதல் ஆள் என்று நினைக்கிறேன். இந்தியாவுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தியதில் எனக்கு மிகுந்த பெருமை.
இதையும் படிங்க: டெல்லியில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! டெம்போவில் நடந்த கொடூரம்! கத்தியால் குத்தி கொலை!
இந்த வெற்றியைத் தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் நான் சமர்ப்பிக்கிறேன் என்றார். மேலும், தமிழக முதல்வர் மோட்டார் விளையாட்டுத் துறைக்கு அளித்த வாக்குறுதிகள் இந்த விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பைக் ரேசிங் களத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ள ஜெகதீஸ்ரீக்கு விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அதென்ன அவ்வளவு பெரிய தேச குற்றமா?... சி.எம்.விஜய்க்கு அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கிய ஆர்.பி.உதயகுமார்...!