• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    டெல்லியில் உச்சக்கட்ட பரபரப்பு... ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் குண்டு கட்டாக கைது...!

    தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
    Author By Amaravathi Tue, 06 Oct 2026 13:41:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rahul, Priyanka and akilesh arrested at delhi

    டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    நாடாளுமன்ற வளாகத்திலிருந்து தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் பாதி வழியிலேயே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் சாலையில் அமர்ந்து மறியல் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

    இதையும் படிங்க: "படிவம் 6ஐ ஞானேஷ்குமார் மாற்றியது அம்பலம்"..! உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி..!!

    இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் பலமுறை அறிவுறுத்தினர். காவல்துறை அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட எம்பிக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்ல மறுத்ததால், எம்பிக்களை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட எம்பிக்கள் காவல்துறை வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் ஏற்றப்பட்டு வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    இந்தக் கைது நடவடிக்கையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களும் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

    தமிழகத்திலிருந்தும் இந்தப் போராட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்திக் சிதம்பரம், மதிமுக சார்பில் துரை வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சு.வெங்கடேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், ரவிக்குமார் உள்ளிட்ட எம்பிக்களும் பேரணியில் பங்கேற்றனர்.

    தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்ற எதிர்க்கட்சி எம்பிக்கள், அலுவலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகளுக்கு அருகே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, அவர்கள் சாலையிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எஸ்ஐஆர் விவகாரத்தில் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம், படிவம் 6-ஐ பயன்படுத்துவது தொடர்பாக எழுந்துள்ள கேள்விகள் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பேற்று ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

    இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தை நோக்கி எதிர்க்கட்சி எம்பிக்களின் பேரணி நடைபெற்றது.

    காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான எம்பிக்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.

    பேரணியில் பங்கேற்ற எம்பிக்கள் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், அவர்கள் குழுக்களாக கைது செய்யப்பட்டு பேருந்துகளில் ஏற்றப்பட்டு வருகின்றனர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோரும் கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனங்களில் வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட பின்னரும் எம்பிக்கள் காவல்துறை பேருந்துகளிலும், சிலர் பேருந்தின் கூரைகளிலும் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். தேசியக் கொடி மற்றும் தங்களது கட்சிக் கொடிகளை ஏந்தியபடி, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

    அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியினரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.

    டெல்லியில் ஒருபுறம் மாணவர் அமைப்புகளின் போராட்டம், மறுபுறம் எதிர்க்கட்சி எம்பிக்களின் போராட்டம், மற்றொரு புறம் பல்வேறு அரசியல் அமைப்புகளின் சார்பில் நடைபெறும் போராட்டங்கள் என தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சி எம்பிக்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தால் டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

    இதையும் படிங்க: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்! ராகுல் காந்தி ஆவேசம்!

    மேலும் படிங்க
    மூன்றே நாட்களில் 2000 பைக்குகள் பறிமுதல்... போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை..!!

    மூன்றே நாட்களில் 2000 பைக்குகள் பறிமுதல்... போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை..!!

    தமிழ்நாடு
    முதல்வரின் பெரம்பூர் வெற்றியை எதிர்த்த வழக்குகள்...  நிராகரிக்க கோரி கடும் வாதம்..!

    முதல்வரின் பெரம்பூர் வெற்றியை எதிர்த்த வழக்குகள்... நிராகரிக்க கோரி கடும் வாதம்..!

    தமிழ்நாடு
    சட்டவிரோத குவாரி அபராத அரசாணை! இடைக்கால தடையை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    சட்டவிரோத குவாரி அபராத அரசாணை! இடைக்கால தடையை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    தமிழ்நாடு
    இயல், இசை, நாடக மன்ற தலைவராக நியமனம்... முதல்வர் விஜயிடம் வாழ்த்து பெற்ற புஷ்பவனம் குப்புசாமி..!!

    இயல், இசை, நாடக மன்ற தலைவராக நியமனம்... முதல்வர் விஜயிடம் வாழ்த்து பெற்ற புஷ்பவனம் குப்புசாமி..!!

    தமிழ்நாடு
    2026 இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு! ஐஸ்கியூப் சாதனையாளர் பிரான்சிஸ் ஹால்சனுக்கு கௌரவம்!

    2026 இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு! ஐஸ்கியூப் சாதனையாளர் பிரான்சிஸ் ஹால்சனுக்கு கௌரவம்!

    உலகம்
    விசாரணையின்றி டாஸ்மாக் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூடாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    விசாரணையின்றி டாஸ்மாக் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கூடாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share