பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சட் பூஜை குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறிய கருத்துகளால் காங்கிரஸ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்து வருவதாக மத்திய பார்லிமெண்டரி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். ராகுலின் பேச்சு கட்சிக்கு தீங்கு விளைவிப்பதாகவும், அவரது அவதூறு கருத்துகளால் மக்கள் காங்கிரஸை ஆட்சிக்கு கொண்டு வர மாட்டார்கள் என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
ராகுல் காந்தி பீகார் தர்பங்கா மற்றும் முசாஃபர்பூரில் நடந்த இந்தியா கூட்டணி பிரச்சாரத்தில், "பிரதமர் மோடி ஓட்டுக்காக டான்ஸ் ஆடுவார். சட் பூஜை யமுனை குளிப்பு நாடகம்" என்று கிண்டலடித்தார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அரசு "பாஜக ரிமோட் கண்ட்ரோல்" மூலம் நடப்பதாகவும் குற்றம் சாட்டினார். இந்தப் பேச்சுக்கு பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நிருபர்களிடம் கூறியதாவது: "பிரதமர் மோடி குறித்து ராகுலின் கருத்தால் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் உள்ள சிறந்த தலைவர்கள் கூட ராகுலின் கருத்துகளால் வெட்கப்படுகிறார்கள். ராகுலின் கருத்துகளால் காங்கிரஸ் கட்சி பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்னை அவமானப்படுத்திட்டாங்க!! ராகுல் கிண்டலுக்கு மோடி வார்னிங்! பீகாரில் சூடுபிடிக்கும் பிரசாரம்!

எந்தத் தலைவரும் அத்தகைய மொழியில் பேச முடியாது. ராகுல் தொடர்ந்து இப்படிப் பேசினால், இந்த நாட்டு மக்கள் காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர மாட்டார்கள். ராகுல் ஒவ்வொரு முறை அவதூறு கருத்துக்களை பேசும் போதும் பின்னடைவை சந்திப்பதால், காங்கிரஸ் கட்சியினர் கவலைப்படுகிறார்கள். நாடு முன்னேறி வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது" என்றார்.
ராகுலின் பேச்சு பீகார் தேர்தல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட் பூஜை உணர்வுகளை புண்படுத்தியதாக பாஜக குற்றம் சாட்டுகிறது. காங்கிரஸ் தரப்பு, "ராகுல் உண்மையைச் சொன்னார்" என்று பதிலடி கொடுத்துள்ளது. பீகார் தேர்தல் மூன்று கட்டங்களில் நடக்கிறது. இந்த சர்ச்சை ஓட்டு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஓட்டுக்காக பரதநாட்டியமே ஆடுவாரு மோடி!! பீகார் பிரசாரத்தில் ராகுல்காந்தி விமர்சனம்! பாஜக கொந்தளிப்பு!