வடக்கு ஆந்திர - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்தியமேற்கு அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளில் நிலவி வந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு சத்திஸ்கர் பகுதிகளில் அடுத்த இரு தினங்களில் கடந்து செல்லக்கூடும் என கூறப்பட்ட நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் கூறியுள்ளது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தின் ஒரே நிமிடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது.
இதையும் படிங்க: சும்மா வெளுக்கப்போகுது பாருங்க... 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! முழு விவரம்
இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று பிற்பகல் ஒரு மணி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மழை பிச்சு உதறப்போகுது! மக்களே உஷார்... வானிலை மையம் கொடுத்த புது அப்டேட்