தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டுமே அதிக காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல் சின்னங்கள் உருவாகி இருக்கும் சூழலில், அதேபோல் இந்த ஆண்டு நிறைய புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. ஒவ்வொரு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சமீப நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நேரத்தில் சற்று மழை பொழிவு அதிகமாக இருந்தாலும் இடையில் மழைப்பொழிவு இல்லாமல் இருந்தது. மோன்தா புயல் உருவாக்கிய போது பெய்த மழை படிப்படியாக குறைந்தது. இந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.

தமிழகத்தில் சென்னை உட்பட 27 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் தேனி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சேலம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வங்கக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ... எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தொடர்ந்து திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களிலும் இன்று மழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேலும் வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடிச்சு நகர்த்த போகுது... 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... உஷார் மக்களே...!