• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சீரழிவை சந்திக்கும் கல்வித்துறை.. அரசு காட்டும் அக்கறை அவ்வளவு தான்.. திமுக அரசை சாடும் ராமதாஸ்..!

    அரசு பள்ளிகளுக்கு போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; ஆண்டுக்கு இருமுறை தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக அரசு வலியுறுத்தி உள்ளார்.
    Author By Pandian Tue, 25 Mar 2025 12:09:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ramadoss-condemns-dmk-government

    பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- 2025-ம் ஆண்டு நடத்தப்படவிருக்கும் போட்டித் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது. டிசம்பர் மாத இறுதியிலேயே வெளியிடப்பட்டிருக்க வேண்டிய ஆண்டுத் திட்டத்தை 3 மாதங்கள் தாமதமாக இப்போது தான் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது என்றாலும் கூட, அது ஆசிரியர் பணிக்காக காத்திருப்போரை ஏமாற்றியிருக்கிறது என்பது தான் உண்மையாகும்.

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் குறித்த விவரங்கள் அதற்கு முந்தைய ஆண்டின் இறுதியில் வெளியிடப்படுவது வழக்கம். நடப்பாண்டில் என்னென்ன பணிக்கு எவ்வளவு பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்பது குறித்த விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடாததை குறை கூறி, கடந்த 5-ம் தேதி நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்துதான் ஆண்டுத் திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டிருக்கிறது.

    Ramadoss condemns DMK government

    2025-ம் ஆண்டில் மொத்தம் 9 வகையான தேர்வுகளை நடத்தப்போவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அவற்றில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4,000 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட 3 தேர்வுகள் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டிருந்தவை. அவற்றில் இரு போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்ப நடைமுறைகளும் தொடங்கி விட்டன. கல்லூரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு அறிவிக்கை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தாலும், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகள் அண்ணா பல்கலைக்கழகத்தாலும் ஏற்கனவே அறிவிக்கை செய்யப்பட்டவை.

    இதையும் படிங்க: எங்களை நாங்களே காப்பாத்திக்கிறோம்.. இலங்கை செல்லும் தமிழக மீனவர் குழு..!

    Ramadoss condemns DMK government

    1,915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 1,205 பட்டதாரி ஆசிரியர்கள், 51 வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகிய 3 வகை பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் மட்டும் தான் புதிதாக அறிவிக்கப்பட்டவையாகும். 2023-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி அறிவிக்கை செய்யப்பட்ட 3,192 பட்டதாரி ஆசிரியர்களையும், 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கை செய்யப்பட்ட 2,768 இடைநிலை ஆசிரியர்களையும் தேர்வு செய்யும் பணிகள் ஒன்றரை ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவடையவில்லை. இத்தகைய சூழலில் புதிய ஆள்தேர்வு அறிவிப்புகள் திட்டமிட்டபடி செயல்வடிவம் பெறுமா? என்பதே பெரும் வினா தான்.

    Ramadoss condemns DMK government

    2022-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு இதுவரை 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகள் ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி பெற்று வெளிவந்துள்ளனர். ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால் அவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற முடியவில்லை. அடுத்த சில மாதங்களில் நடப்பாண்டிற்கான தேர்வுகள் முடிவடைந்து லட்சக்கணக்கான மாணவர்கள் ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதியைப் பெற்றிருப்பார்கள். அவர்களும் தகுதித்தேர்வில் பங்கேற்கும் வகையில் ஜூன் மாதத்தில் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், அதை தேர்வு வாரியம் செய்யவில்லை.

    Ramadoss condemns DMK government

    மத்திய அரசின் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டும். ஆசிரியர் படிப்பு படித்து முடிக்கும் மாணவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணியில் உடனடியாக சேர வேண்டும் என்பதற்காகவே இந்த விதி கொண்டு வரப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூட ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுவதில்லை. ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகள் நலனில் தமிழக அரசு காட்டும் அக்கறை அவ்வளவு தான். இது அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும்.

    Ramadoss condemns DMK government

    தமிழ்நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் ஒரே ஒரு இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கூட நியமிக்கப்படவில்லை. கடந்த ஆண்டில் நடத்தப்பட்டத் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் இன்னும் பணி வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் இனியும் ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை என்பதால் எதற்காக தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என நினைத்து விட்டதால் தான் நான்காவது ஆண்டாக நடப்பாண்டிலும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளை திமுக அரசு நடத்தவில்லையோ? என எண்ணத் தோன்றுகிறது.

    Ramadoss condemns DMK government

    கடந்த காலங்களில் இல்லாத வகையில் நடப்பு ஆட்சிக்காலத்தில் தான் கல்வித்துறை மிகவும் மோசமான சீரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆசிரியர்களையே நியமிக்காமல் அரசுப் பள்ளிகளில் தரமானக் கல்வியை எவ்வாறு வழங்க முடியும்? எனத் தெரியவில்லை. தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக அரசு பள்ளிகளை சீரழிக்கும் போக்கைக் கைவிட்டு அரசு பள்ளிகளுக்கு போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; ஆண்டுக்கு இருமுறை தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ‘கேந்த்ரியா பள்ளிகளில் தமிழகத்துக்கு தமிழ் ஆசிரியர்கள் ஒதுக்கப்படவில்லை’: மத்திய அரசு விளக்கம்..!

    மேலும் படிங்க
    “மீண்டும் ஸ்டாலின் தான் முதல்வர்... ஆனா...”  - ரூ.5000 கொடுத்த ஜோரில் மகளிருக்கு பொன்முடி வைத்த கோரிக்கை...!

    “மீண்டும் ஸ்டாலின் தான் முதல்வர்... ஆனா...” - ரூ.5000 கொடுத்த ஜோரில் மகளிருக்கு பொன்முடி வைத்த கோரிக்கை...!

    அரசியல்
    தமிழக அரசியலில் நெகிழ்ச்சி...!! நேரில் நலம் விசாரித்த முதல்வர்... ஸ்டாலின் கையைப் பிடித்து உருகிய எச்.ராஜா...!

    தமிழக அரசியலில் நெகிழ்ச்சி...!! நேரில் நலம் விசாரித்த முதல்வர்... ஸ்டாலின் கையைப் பிடித்து உருகிய எச்.ராஜா...!

    அரசியல்
    அதுல தான் நான் ஸ்பெஷலிஸ்ட்டே.... காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்...இந்த வருஷம் தீம் என்ன தெரியுமா?

    அதுல தான் நான் ஸ்பெஷலிஸ்ட்டே.... காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்...இந்த வருஷம் தீம் என்ன தெரியுமா?

    உலகம்
    ராசிபலன் (14.02.2026): இந்த 5 ராசிக்காரர்களுக்கு சனி பகவான் இன்று அள்ளி அள்ளி கொடுப்பாராம்...! 

    ராசிபலன் (14.02.2026): இந்த 5 ராசிக்காரர்களுக்கு சனி பகவான் இன்று அள்ளி அள்ளி கொடுப்பாராம்...! 

    ஜோதிடம்
    அரசியல் களம் சூடுபிடிக்கிறது: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!

    அரசியல் களம் சூடுபிடிக்கிறது: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!

    தமிழ்நாடு
    அமித் ஷா அடிக்கடி வரட்டும்.. 200 இடங்களை வெல்வோம்... அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

    அமித் ஷா அடிக்கடி வரட்டும்.. 200 இடங்களை வெல்வோம்... அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “மீண்டும் ஸ்டாலின் தான் முதல்வர்... ஆனா...”  - ரூ.5000 கொடுத்த ஜோரில் மகளிருக்கு பொன்முடி வைத்த கோரிக்கை...!

    “மீண்டும் ஸ்டாலின் தான் முதல்வர்... ஆனா...” - ரூ.5000 கொடுத்த ஜோரில் மகளிருக்கு பொன்முடி வைத்த கோரிக்கை...!

    அரசியல்
    தமிழக அரசியலில் நெகிழ்ச்சி...!! நேரில் நலம் விசாரித்த முதல்வர்... ஸ்டாலின் கையைப் பிடித்து உருகிய எச்.ராஜா...!

    தமிழக அரசியலில் நெகிழ்ச்சி...!! நேரில் நலம் விசாரித்த முதல்வர்... ஸ்டாலின் கையைப் பிடித்து உருகிய எச்.ராஜா...!

    அரசியல்
    அதுல தான் நான் ஸ்பெஷலிஸ்ட்டே.... காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்...இந்த வருஷம் தீம் என்ன தெரியுமா?

    அதுல தான் நான் ஸ்பெஷலிஸ்ட்டே.... காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்...இந்த வருஷம் தீம் என்ன தெரியுமா?

    உலகம்
    அரசியல் களம் சூடுபிடிக்கிறது: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!

    அரசியல் களம் சூடுபிடிக்கிறது: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன்!

    தமிழ்நாடு
    அமித் ஷா அடிக்கடி வரட்டும்.. 200 இடங்களை வெல்வோம்... அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

    அமித் ஷா அடிக்கடி வரட்டும்.. 200 இடங்களை வெல்வோம்... அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    நயினாருக்கு அரசியல் அறிவே இல்லை: த.வெ.க. இணை செயலாளர் நிர்மல் குமார் ஆவேசம்!

    நயினாருக்கு அரசியல் அறிவே இல்லை: த.வெ.க. இணை செயலாளர் நிர்மல் குமார் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share