ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மின்சாரம் பாய்ந்து அக்கா, தம்பி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அச்சங்குளம் கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியும், 5 வயது சிறுவனும் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்துள்ளனர். மின்சாரம் பாய்ந்ததில் சிறுமி நிறைமதியும், அவரது தம்பி பாலப்பிரவீணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கமுதி அருகே உள்ள பகுதியில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள மின்வயர் ஒன்று எதிர்பாராதவிதமாக அறுந்து தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறியாமல் அங்கு சென்ற பிரவீன் (6), மின்வயரை தொட்டுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததாக தெரிகிறது. இதில் பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தம்பி மின்சாரம் தாக்கி கீழே விழுந்தது தெரியாமல் அவரை நிறைமதி (10) தொட்டுள்ளார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியதில், நிறைமதியும் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனும், சிறுமியும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின...
சிறார்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: குப்பை கிடங்கில் கிலோ கணக்கில் தங்க கட்டிகள்..! கட்டுக்கட்டாக பணம்.!! 5 பேரிடம் தீவிர விசாரணை..!