தூத்துக்குடியில் கடந்த 8-ம் தேதி மாவட்ட ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பேசியது: விசுவாசம் என்றால் என்ன தெரியுமா, கொடி பறக்கும்போது கைதட்டுவது அல்ல. அந்தக் கொடி பறப்பதற்கு யார் இடையூறாக இருந்தாலும், அந்தக் கையை எடுத்துவிட்டு கொடியை பறக்க விடுவதுதான் விசுவாசம்.
அதிமுகவை நேற்று பிறந்த டவுசர் பையன் விஜய் அபகரிக்க,அழிக்க நினைக்கிறான். அதிமுகவை யாரேனும் அழிக்க நினைத்தால், அவர்களின் வம்சமே நாசமாக போகும். மேலும் காவிரி தண்ணீரை பற்றி பேசினால், காவிரியாவது தண்ணியாவது, எங்க அண்ணி திரிஷாவைப் பற்றி யார் பேசியது என்று தவெகவினர் கேட்கிறார்கள். இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உதயகுமாருக்கு எதிராக தூத்துக்குடி புறநகர் மாவட்ட தவெக பொருளாளர் அருண்குமார் எஸ்பி அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழக முதல்வர் குறித்து தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசியுள்ளார். இது தவெக தொண்டர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவதூறு கருத்துகளை அவர் தெரிவிக்காத வகையில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: தமிழகமே கொந்தளிக்குது.. வாயை திறந்து பேசுங்க விஜய்... வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!
இந்த விவகாரத்தில் ஆர்.பி.உதயகுமாரிடம் விசாரணை நடத்த போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தவெகவிற்கு பெரும் தலைவலியாக மாறியது. அதுவும் சென்னையில் விசாரணை நடத்தாமல் தஞ்சாவூர் வரை அழைத்துச் சென்றதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் இறங்கியதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில் ஆர்.பி.உதயகுமாரிடம் மதுரையில் வைத்து ஆலோசனை நடத்தப்படுமா? அல்லது தூத்துக்குடிக்கு கைது செய்து அழைத்துச் செல்லப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: பட்டை நாமமா? மொட்டையா? - பட்ஜெட்டில் மக்களுக்கு என்ன தரப்போகிறார் விஜய்... ஆர்.பி.உதயகுமார் கேள்வி...!