அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அதிமுக ஆட்சி அமைக்கும் எனவும் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதற்கான முயற்சிகளை 10 நாட்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்தில் பங்கேற்க மாட்டேன் எனவும் தெரிவித்தார். தலைமைக்கு செங்கோட்டையன் கெடு விதித்த நிலையில் அவரைக் கட்சிப் பதவியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.
அவரது ஆதரவாளர்கள் கட்சிப் பதவியையும் பறித்தார். இதைத்தொடர்ந்து ஏராளமான அதிமுகவினர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக தங்களது பதவியை ராஜினாமா செய்ய கடிதம் கொடுத்தனர். அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்று செங்கோட்டை கூற, ஓ பன்னீர்செல்வம் இதற்கு முழு ஆதரவை தெரிவித்தார். ஓபிஎஸ் ஆதரவாளர்களும் செங்கோட்டையனை சந்தித்து முழு ஆதரவை கொடுத்தனர்.

இருப்பினும் கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்று செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்தார். டெல்லிக்குச் சென்று அமித்ஷாவையும் சந்தித்து பேசு இருந்தார் செங்கோட்டையன். ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரை அதிமுகவில் இணைக்கும் முயற்சியில் செங்கோட்டையன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனின் வலியுறுத்தலை ஏற்காமல் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: அம்மா ஆத்மா சும்மா விடாது! வயிற்றெரிச்சல் பிடிச்ச மனுஷங்க... கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்
இந்த நிலையில் கட்சியின் ஒற்றுமை என்ற பெயரில் கோஷம் எழுப்பியவர்கள் செல்லா காசாகி விட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். அந்த செல்லாக் காசுகள் சலசலப்பு ஏற்படுத்தினாலும் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆர்.பி.உதயகுமாரின் தாயார் மறைவு.. இபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!