திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சேர்ந்தவர் தொழிலதிபரின் மகள் ரிதன்யா. இவருக்கு கவின்குமார் என்பவரோடு சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி 78 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், கணவன் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ரிதன்யாவை கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால் மனமடைந்து போன ரிதன்யா செய்வதறியாமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே தனது காரை ஓட்டிச் சென்ற ரிதன்யா தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் வழிபட்டுள்ளார். தொடர்ந்து சாலையோரமாக காரை நிறுத்திய அவர், தனது வாழ்க்கை தொடர்பாகவும், தனது சாவுக்கு யார் காரணம் என்பது தொடர்பாகவும் ஆடியோ ஒன்றை வாட்ஸ் அப் மூலம் தனது தந்தைக்கு அனுப்பி விட்டு தென்னை மரத்திற்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தனது திருமண வாழ்க்கை சரியாக இல்லை என்றும் ஒருவனுக்கு ஒருத்தி தான் என்ற ஆடியோவையும் ரிதன்யா தன் அப்பாவுக்கு அனுப்பினார். மேலும், கணவன் கவின்குமார் மற்றும் மாமனார் கிருஷ்ணமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்தியதாக ரிதன்யா வேதனை தெரிவித்திருந்தார். இனியும் தன்னால் வாழ முடியாது என தந்தைக்கு ஆடியோ அனுப்பி வைத்துவிட்டு ரிதன்யா எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் மூவருக்கும் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. தங்கள் மகள் மரணத்திற்கு நீதி கேட்டு ரிதன்யாவின் பெற்றோர் போராடி வருகின்றனர். இந்த நிலையில் ரிதன்யாவின் பிறந்த நாளான என்று அவரது தந்தை அண்ணாதுரை மற்றும் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது குடும்ப வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்காக உதவும் வகையில் ரிதன்யா பெயரில் இலவச சட்ட உதவி மையம் தொடங்க உள்ளதாக அறிவித்தனர்.
இதையும் படிங்க: இவ்வளவுதான் சட்டமா? தலையில இடியை இறக்கிட்டீங்களே! குமுறும் ரிதன்யாவின் தந்தை..!
இது குறித்து ரிதன்யாவின் பெற்றோர் பேசுகையில், வரதட்சனை மற்றும் குடும்ப வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ரிதன்யா பெயரில் உருவாக்கப்படும் சமூக சேவை அறக்கட்டளை மூலம் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கப்படும் என்று கூறினர்.
இதையும் படிங்க: #BREAKING தமிழகத்தையே உலுக்கிய ரிதன்யா தற்கொலை வழக்கு - கணவர், மாமனார், மாமியாருக்கு ஜாமீன்...!