செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திமுக வேட்பாளராகக் களமிறங்கும் இ.பரந்தாமனின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இவர் இன்றைக்கு சட்டசபைக்குப் போவாரேயானால், உடனடியாக நான் உறுதி என்று சொல்கிறேன். இன்னும் மூன்று மாதங்களுக்குள் இந்த ஆட்சி கவிழும்.
இதையெல்லாம் நாம் சொல்லி ஓட்டு கேட்பதால்தான் அது சீக்கிரமாக நடக்கும். இதையெல்லாம் சொல்லி நீங்கள் ஓட்டு கேட்க வேண்டும்.
நான் முன்னால் சொன்னது போல, யாருக்கும் எனக்கான வாய்ப்பு மறுக்கப்படவில்லை. நன்றாக, இந்த இயக்கத்தினுடைய வரலாற்றை தயவுசெய்து வாங்கிப் படியுங்கள்.
இதையும் படிங்க: மதுராந்தகத்தில் திமுக வெற்றி பெற்றால் ஆட்சி கவிழும்! திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு!
இந்த இயக்கத்தின் தொடக்க வரலாறே மு.க. ஸ்டாலினுக்கு இந்த இயக்கத்தில் இருந்துதான் ஆரம்பித்தது. தயவுசெய்து வாங்கிப் படியுங்கள். முதல் வாசகமே என்னவென்றால், ஆர்எஸ் பாரதியும் நானும் புறப்பட்டபோது சொல்லி... அந்த நாட்களில் இருந்து இன்றைக்கு இருக்கிற நிலை வரையிலான வரலாறு அதில் இருக்கிறது.
தயவுசெய்து பெரியவர்கள், நீங்கள் எல்லாம் அந்தப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். எவ்வளவு சோதனைகளைக் கொடுத்தார்கள், அவ்வளவு சோதனைகளையும் தாங்கிக்கொண்டு இருந்த ஒரு தலைவர், இன்று போராடி தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு தலைவர் மு.க. ஸ்டாலின் வளர்ந்தார்.
எந்தத் தலைவரைப் பற்றியும் வேறு எதுவும் கிடையாது. இந்த 21 நாட்களும் ஒவ்வொரு கட்சிக்காரருடைய மனதிலும் கலைஞரைப் பற்றி அவர் இழிவுபடுத்திப் பேசியதையும், தளபதியைப் பற்றி இழிவுபடுத்திப் பேசியதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
மரியாதை இல்லாமல் நடந்துகொண்டவர்களுக்கு, நிச்சயமாக தொகுதி வந்தால் மிகப்பெரிய பதிலடியைக் கொடுக்க வேண்டும்.
தயவுசெய்து யாரும் கோபித்துக்கொள்ளாதீர்கள். நான் யாரையும் இழிவுபடுத்திப் பேசவில்லை; தவறாகவும் பேசவில்லை.
இவர் ஒரு காலத்தில் ஒரே ஒரு எம்எல்ஏ என்ற நிலையில் இருந்தார். அங்கே இருந்தார். ஆனால், இவர் இன்றைக்கு சட்டசபைக்குப் போவாரேயானால், உடனடியாக நான் உறுதி என்று சொல்கிறேன். இன்னும் மூன்று மாதங்களுக்குள் இந்த ஆட்சியைப் பற்றி எல்லாம் சொல்லிவிடுவேன். ஜனவரிக்குள் இந்த ஆட்சி கவிழும்.
தமிழ்நாடு வாழ வேண்டும். இந்த 21 நாட்களும் வேலை செய்ய வேண்டும். 15ஆம் தேதி நாமினேஷன் போட்டு, அதற்குப் பிறகு 100 வார்டு சபை, 45 நாள்... போகிறோமோ, இல்லையோ, அதேபோல மேலே போட வேண்டிய டிரஸ் போடுவது போல அல்லாமல், இந்த 21 நாட்களும் ஒவ்வொரு கழகத் தொண்டனும் திமுகவின் வரலாற்றையும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கிற பணியை மேற்கொள்ள வேண்டும்.
21 நாட்களும் வைராக்கியமாக வேலை செய்தால், நிச்சயமாக ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்துக் காட்ட வேண்டும்.
இங்கு இருப்பவர்கள் அனைவரும் வைராக்கியமானவர்கள். வாக்காளர்களை மரியாதை இல்லாமல் உதாசீனப்படுத்துகிறவர்களுக்கு, இந்த ஊருக்குள் எந்த அளவுக்கு பணியாற்ற வேண்டுமோ அந்த அளவுக்கு பணியாற்ற வேண்டும்.
நிச்சயமாக செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி.
இதையும் படிங்க: “ஏண்டா முட்டாள்... ஆணானப்பட்ட எம்.ஜி.ஆரே எழுதிக் கொடுத்துட்டு போய்ட்டாரு...” - விஜய்க்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு...!