இந்திய பேட்மிண்டன் ஸ்டார் சாய்னா நேவால் மறுபடியும் செய்திகளில் அடிபட்டிருக்காங்க! இந்த முறை, அவங்க விளையாட்டு சாதனைகளுக்காக இல்லை, தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த ஒரு ட்விஸ்டுக்காக. சாய்னாவும் அவங்க கணவர் பருபுல்லி காஷ்யப்பும் பிரிஞ்சு, மறுபடியும் ஒண்ணு சேர்ந்த கதை தான் இப்போ சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்.
சாய்னா நேவால், 35 வயசு, ஒரு காலத்தில் உலகின் நம்பர் 1 பேட்மிண்டன் வீராங்கனையா திகழ்ந்தவர். ஒலிம்பிக்கில் வெண்கலம், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, வெண்கலம்னு பதக்கங்களை அள்ளியவர். 2023-ல பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெறுவதா அறிவிச்சார். இதுக்கு நடுவுல, 2018-ல முன்னாள் பேட்மிண்டன் வீரர் பருபுல்லி காஷ்யப்பை கல்யாணம் பண்ணாங்க.
இருவரும் ஐதராபாத்தில் சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்தாங்க. ஆனா, சமீபத்துல ஒரு அதிர்ச்சி செய்தி வந்துச்சு. 7 வருஷ திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போறதா சாய்னா இன்ஸ்டாகிராமில் அறிவிச்சாங்க. "நாங்க வெவ்வேறு பாதையில் பயணிக்க முடிவு பண்ணியிருக்கோம்"னு ஒரு பதிவு போட்டு எல்லாரையும் ஆச்சரியப்படுத்தினாங்க.
இதையும் படிங்க: காதல் கணவரை பிரியும் சாய்னா நேவால்! 7 ஆண்டுகள் மணவாழ்க்கை கசக்க காரணம் என்ன?
இந்த பிரேக்அப் செய்தி ரசிகர்களுக்கு பெரிய ஷாக். சமூக வலைதளங்களில், "என்னாச்சு இவங்களுக்கு?"னு பேச்சு கிளம்பிடுச்சு. காஷ்யப், சாய்னா ரெண்டு பேருமே பேட்மிண்டன் உலகத்துல பெரிய ஆளுமைகள். இவங்க பிரிவு பலரையும் உலுக்கியது. ஆனா, இப்போ ஒரு புது ட்விஸ்ட்! சாய்னா திடீர்னு ஒரு இன்ஸ்டா பதிவு போட்டு, "பிரேக்அப் முடிவை கைவிடுறோம்"னு அறிவிச்சிருக்காங்க.

காஷ்யப்போடு இருக்குற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, "சில நேரம் நம்மோட இருக்குறவங்க மதிப்பு, அவங்க தூரமா இருக்கும்போது தான் தெரியுது. இப்போ மறுபடியும் எங்க உறவை கட்டமைக்க முயற்சி பண்ணுறோம்"னு எமோஷனலா எழுதியிருக்காங்க. இது பேட்ச் அப் ஆனதோட சிக்னல்!
இந்த முடிவு ரசிகர்களுக்கு மறுபடியும் ஒரு சர்ப்ரைஸ். "சாய்னா, காஷ்யப் சேர்ந்துட்டாங்க, சூப்பர்!"னு பலரும் கமென்ட் பண்ணுறாங்க. இவங்க ரெண்டு பேரும் ஒரு பவர் கப்பிள். ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்குறதுக்காக மறுபடியும் முயற்சி பண்ணுறது, அவங்க உறவோட வலிமையை காட்டுது. சாய்னா ஒரு போராளி, கோர்ட்டுல மட்டுமில்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் தோல்வியை ஏத்துக்க மாட்டாங்க போல!
இந்த பேட்ச் அப் செய்தி, சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி, "லவ் வின்ஸ்"னு ஹேஷ்டேக் பறக்குது. சிலர், "இவங்க பிரச்சனையை பொதுவுல பகிர்ந்தது தேவையா?"னு கேள்வி எழுப்பினாலும், பெரும்பாலான ரசிகர்கள், "சாய்னா மனசு விட்டு பேசினது அருமை"னு பாராட்டுறாங்க. இந்த சம்பவம், உறவுகளில் ஏற்படுற சவால்களையும், அதை சரி பண்ண முயற்சிக்குற முக்கியத்துவத்தையும் காட்டுது.
இதையும் படிங்க: வங்காள மொழியா? வங்கதேச மொழியா? மம்தாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த முதல்வர்...