சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை துவங்கி உள்ள சன்னிதானம் பகுதியில் காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஏ.டி.ஜி.பி ஸ்ரீஜித் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பதினெட்டாம்படி ஏறும்பொழுது, படிகளை தொட்டு வணங்குவதை தவிர்க்க வேண்டும் .
இந்த ஆண்டு முதல் நாள் எதிர்பார்த்தது 30 ஆயிரம் பக்தர்கள் ஆனால் 55 ஆயிரம் பேர் முதல் நாள் நடை திறந்த அன்று 5 மணியிலிருந்து 11 மணி வரை தரிசனத்திற்கு வந்துள்ளனர்.
சபரிமலைக்கு வரக்கூடிய ஐயப்ப பக்தர்கள் முடிந்தவரை முன்பதிவு செய்து பக்தர்கள் வரவேண்டும் என்றும் தவிர்க்க முடியாத காரணங்களால் மட்டுமே ஸ்பாட் புக்கிங் ஐயப்ப பக்தர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING வெளுத்து வாங்கும் கனமழை... இன்று கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை...!
பம்பை நீலிமலை அப்பாச்சி மேடு சரங்குத்தி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் நிறுத்தி விடுவதால் பல்வேறு சிரமங்களை சந்திக்கிறார்கள் எனவே வரக்கூடிய பக்தர்களை தொடர்ச்சியாக சன்னிதானத்திற்கு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது, பதினெட்டாம் தேதி முதல் பக்தர்கள் நிறுத்தாமல் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் 18-ம் படி வழியாக செல்லக்கூடிய பக்தர்கள் விரைவாக அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .
பதினெட்டாம்படி வழியாக பக்தர்கள் வரும்போது காவல்துறையினர் அவர்களை கையைப் பிடித்து இழுத்து மேலே விடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு காவல்துறையினர் அவ்வாறு செய்யவில்லை வரக்கூடிய ஐயப்ப பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்த அவர், இருந்தாலும் எதிர்வரும் நாட்களில் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு வரக்கூடிய ஐயப்ப பக்தர்கள் சுகமாக ஐயப்பனை தரிசனம் செய்து செல்லும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
18 மணி நேர நடைதிறப்பு:
கார்த்திகை மாதம் 1-ம் தேதி பிறந்ததை ஒட்டி, நேற்று முதல் 41 நாட்கள் நடைபெறும் மண்டலகால பூஜைகளுகாக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு சபரிமலை கோயில் திருநடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 41-ம் நாளான டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது.
தினமும் அதிகாலை 3 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். மதியம் 1 மணிக்கு உச்சபூஜையுடன் நடை சார்த்தப்படும். மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு நடை சார்த்தப்படும். தினமும் 18 மணி நேரம் நடை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING கனமழை எதிரொலி... இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...!