சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ வழக்கில், விசாரணை தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்த வழக்கில் வீரமணியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் மற்றும் வீரமணியின் மற்றொரு உதவியாளர் கணேசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து இருவரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீரமணியுடன் சாந்திக்கும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹனுக்கும் இருந்த தொடர்பு, வீரமணியுடன் அவர்கள் எவ்வளவு காலமாக தொடர்பில் இருந்தனர், வழக்கில் அவர்கள் வகித்ததாகக் கூறப்படும் பங்கு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி வழக்கில் நீதிபதி மேற்பார்வை விசாரணை தேவை! சிபிஎம் மாநில செயலாளர் பி.சண்முகம் வலியுறுத்தல்!
மேலும், இந்த வழக்கில் சிறுமிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எவ்வாறு நடைபெற்றன, அதில் சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனுக்கு இருந்ததாகக் கூறப்படும் தொடர்பு என்ன, வீரமணியுடன் அவர்களது தொடர்பு எந்த அளவுக்கு இருந்தது என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹனிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றதாகவும், வழக்கில் மேலும் ஆதாரங்களைச் சேகரிக்கும் வகையில் போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வழக்குடன் தொடர்புடையவர்கள், சம்பவங்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் இடங்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் குறித்து இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, வீரமணியுடன் தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு, வழக்குடன் தொடர்புடையதாகக் கூறப்படும் கூடுதல் ஆதாரங்களைத் திரட்டி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அதற்கு பதிலளிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் அவரது கணவரிடம் நடைபெற்று வரும் விசாரணை, வழக்கில் அவர்களது பங்கு என்ன என்பது குறித்த கூடுதல் தகவல்களை வெளிக்கொண்டு வருவதற்கான முக்கிய கட்டமாக அமைந்துள்ளது.
சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கனிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது ஜெம் வீரமணியிடம் எத்தனை ஆண்டுகள் பணியாற்றினீர்கள்? சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ய அவருக்கு எப்படி உதவினீர்கள்? என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை போலீசார் அவர்களிடம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், ஜெம் வீரமணிக்கு உடந்தையாக இருந்து எவ்வளவு சொத்துகளை சேர்த்தீர்கள்? என்ற கேள்வியையும் போலீசார் அவர்களிடம் முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாந்தி மற்றும் அவரது கணவரிடம் சுமார் 8 மணி நேரத்தில் 200 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தை உலுக்கிய பாலியல் வழக்கு... ஜெம் வீரமணிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு..! போக்சோ நீதிமன்றம் உத்தரவு.!!