எஸ்பிஐ பேங்க்ல ஹோம் லோன், கார் லோன், பர்சனல் லோன் ஏதாவது வாங்கிருக்கீங்களா? இல்ல புதுசா வாங்க போறீங்களா? அப்போ இந்த ஷாக்கிங் நியூஸ் உங்களுக்காகதான். இந்தியாவுடைய மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா திடீர்னு வட்டி விகிதங்களை ஏத்தி இருக்காங்க. இதனால நம்ம மாசம் மாசம் கட்டுற இஎம்ஐ இனிமேல் அதிகமாக போகுது. என்ன நடந்தது? இதனால யாருக்கெல்லாம் பாதிப்பு? எஸ்பிஐ தனது எம்சிஎல்ஆர் அப்படின்னு சொல்லப்படுற வட்டி விகத்தை 0.10% உயர்த்தி இருக்கு. ஐயோ இந்த எம்சிஎல்ஆர் என்றால் என்ன. இதனால என்னென்ன பாதிப்பு வரும்ன்னு பார்க்கலாம்.
யாரோட இஎம்ஐ எல்லாம் உயர போகிறது என்றால், இனி தான் புதிதாக ஹோம் லோன், கார் லோன் எடுக்கப்போகிறீர்கள் என்றால் அவர்களுக்கு வட்டி கொஞ்சம் அதிகமாக வாய்ப்புள்ளது. இரண்டாவது நீங்க ஏற்கனவே லோன் வாங்கி இருந்து அந்த லோன் எம்சிஎல்ஆர் அடிப்படையில் ஆனதுனா உங்களுக்கும் இஎம்ஐ உயரும். உங்க லோன் அக்ரிமெண்ட் எடுத்து பாருங்க. அதுல எம்சிஎல்ஆர் என போட்டிருந்தால் இந்த மாற்றம் உங்களுக்கு பொருந்தும். ஆனா இது ஒரு நல்ல செய்தியும் இருக்கு. இதனால் சிலருக்கு பாதிப்பு இல்லாமல் நன்மையும் இருக்கிறது.
உங்க லோன் பிக்ஸ்டு ரேட் லோனா இருந்தா, அதாவது வட்டி மாறாத லோனா இருந்தா உங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. நீங்க பழைய இஎம்ஐயை அப்படியே கட்டலாம். அதே மாதிரி உங்களுடைய லோன் இபிஎல்ஆர் அல்லது ரெப்போ ரேட் அடிப்படையில் ஆனதுனா உங்களுக்கும் இப்போதைக்கு எந்த மாற்றமும் கிடையாது. சமீபத்தில் லோன் எடுத்தவங்களுக்கு பெரும்பாலும் இந்த வகை தான் இருக்கும்.
இதையும் படிங்க: “10 ரூபாய் பாலாஜி”... மீண்டும் செந்தில் பாலாஜியை வம்பிழுத்த எடப்பாடி பழனிசாமி...!
சரி இஎம்ஐ எவ்வளவு உயரும்? இந்த 0.10% உயர்வால் நீங்க வாங்கி இருக்க ஒவ்வொரு ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கும் உங்க மாத தவனை சுமார் ₹5லிருந்து 10 வரைக்கும் அதிகமாகலாம். இது சின்ன தொகையா தெரிஞ்சாலும் உங்களுடைய மொத்த கடன் காலத்துல இது ஒரு பெரிய தொகையா மாறும். அதனால உடனே உங்க லோன் எந்த என வங்கியை அணுகி தெரிஞ்சிக்கோங்க
இதையும் படிங்க: TNPSC தேர்வர்களே... குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிப்பு..!