திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காவலுர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த வேலு-திலகவதி தம்பதியர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒன்றரை வயதுடைய துருசாந்த் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இதில் இரண்டு பெண் குழந்தைகள் சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் 2 பெண் குழந்தைகளை பள்ளி வேனில் ஏற்றுவதற்காக குழந்தையின் தாய் திலகவதி, குழந்தை துர்சாந்த் ஐ வீட்டில் விட்டு இரண்டு பெண் குழந்தைகளை பள்ளி வேனில் ஏற்ற சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை துர்சாந்த் தாய்க்கு பின்னால் சென்று பள்ளிப் வேனில் சிக்கி உயிரிழந்துளான்.
ஓட்டுநர் பள்ளி வேனில் இடது பக்கத்தில் மாணவர்கள் ஏறி விட்டனரா என கவனித்து வேனை இயக்கிய நிலையில் வலது பக்கத்தில் குழந்தை இருப்பதை அறியாமல் வேனை இயக்கிய போது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எமனாக மாறிய யூரியா லாரி... தூக்கி வீசப்பட்ட தந்தை, மகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி...!
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவலூர் போலீஸார் விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி ஆலங்காயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒன்றரை வயது குழந்தை தாய் மற்றும் தன் சகோதரிகள் கண் முன்னே பள்ளி வேனில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எப்படியெல்லாம் சாவு வருது... குறுக்கே சட்டென வந்த தெருநாய்... மனைவி கண்முன்னே பறிபோன கணவன் உயிர்...!